கவின் மற்றும் ஆண்ட்ரியா கூட்டணியில் முதல் முறையாக உருவான மாஸ்க் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் படத்தை இயக்க, இசையமைப்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றினார். சார்லி, பவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. வெளியான முதல் நாளிலிருந்து வசூல் விவரங்கள் கவனத்துடன் பார்க்கப்பட்டன.
இந்த நிலையில், மாஸ்க் படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உலகளவில் இந்த திரைப்படம் ரூ.15 கோடி வசூல் செய்து முடித்துள்ளது. திரைப்படம் விமர்சன ரீதியாக சராசரி மதிப்பீடுகளை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக ஒரு நிலையான வரவேற்பை பெற்றுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

