கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் ‘மசாஜ் நிலையம்’ என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில், தாய்லாந்துப் பெண்கள் உட்பட ஏழு பேரை கொழும்பு தெற்குப் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (டிசம்பர் 15) கைது செய்துள்ளனர்.

கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, விபச்சார விடுதிக்கு உதவியதாகக் கூறப்படும் 40 வயதுடைய ஒரு சந்தேக நபரும், 29 முதல் 36 வயதுக்குட்பட்ட ஆறு தாய்லாந்துப் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply