பாருவிடம் தான் உடன்படும் மற்றும் முரண்படும் இடங்களை வலிக்காத உபதேசமாக சொல்லிச் செல்கிறார் சரஸ்வதி.

வருகிற விருந்தினர்களிடம் போட்டியாளர்கள் அடிப்படையாக கேட்கும் கேள்வி இதுதான். “வெளில எனக்கு கெட்ட பெயரா?”

எனில் நாம் செய்யும் காரியங்களின் நன்மையும் தீமையும் நமக்கே உறைப்பதில்லை. எங்காவது யாரையாவது மிதித்துக் கொண்டே போகிறோம்.

ஆனால் உள்ளுக்குள் ‘நான் எத்தனை நல்லவன் தெரியுமா?’ என்று நமக்கு நாமே சான்றிதழ் தந்து கொள்கிறோம். மற்றவர்களை வெறுக்கிறோம்.

பிக் பாஸ் காமிராக்கள் போன்று நம் மனச்சாட்சி ‘குறும்படம்’ போட்டால்தான் நிதர்சனம் புரிகிறது. பலர் காமிராக்களை ஆஃப் செய்து வைத்திருப்பதுதான் பிரச்சினை.

‘ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்… தூணாக தாங்குவது காதல்தான்… / ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க… அழகான காரணமே காதல்தான்…’ என்று காதலின் முக்கியத்துவத்தைச் சொல்லும் பாடலை காலையில் ஒலிக்க விட்டார் பிக் பாஸ். (என்ன சொல்ல வர்றாரு?! – பாரு கம்முவிற்கு ஆதரவுக் குரலா?!)

பாருவும் அவரது அம்மாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பாருவின் துடுக்குத்தனத்திற்கு நேர் மாறாக அவரது அம்மா நிதானமாக பேசுகிறார். பல விஷயங்களை முற்போக்கான பார்வையில் அணுகுகிறார். வயதும் அனுபவமும் தந்திருக்கும் முதிர்ச்சி.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 82

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –82 |25/12/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 81

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –81 |24/12/2025

Share.
Leave A Reply