மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோத்தல்ல தனியார் தோட்டத்தில், நான்கு பிள்ளைகளின் தாயொருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 52 வயதுடையவர் எனவும், குறித்த தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின்னர், தற்போது நாளாந்த கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தவர் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டதைத் தொடர்ந்து, சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இத்தற்கொலைக்கான காரணம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply