யாழ்.கரவெட்டி – கோவிற்சந்தை பகுதியில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள் வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த குடும் பஸ்த்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட் டுள்ளார்.

நேற்று நண்பகல் கர வெட்டி கோவிற்சந்தை பகுதியில் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு தாக்குதலில் அவ் வழியாக பயணித்த துன்னாலை தெற்கை சேர்ந்த இராசேந்திரன் அஜித் (வயது30) என்ற, இளம் குடும் பஸ்தர் தலை, கால், கை போன் றவற்றில் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு பருத்தித்துறை
ஆதார வைத்தியசாலையில் அனுமித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக் காக யாழ்.போதனா வைத்தியசா லைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply