தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை, தற்போது இந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருக்கிறார். இந்த சிறுமி யார் தெரியுமா?
மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, இன்று பாலிவுட் வரை தனது முத்திரையைப் பதித்து வரும் இந்த சிறுமி யார் என்று உங்களுக்குத் தெரியுமா? சினிமாவுக்கு வருவதற்கு முன்பே மருத்துவப் படிப்பை (MBBS) முடித்தவர். இப்போது ஓரளவு யூகித்திருப்பீர்களே? ஆமாம், நாம் பேசுவது தென்னிந்தியத் திரையுலகின் ஃபேவரிட் நாயகி சாய் பல்லவி பற்றித்தான்.
சாய் பல்லவி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமான கோத்தகிரியில் பிறந்து வளர்ந்தவர்.
இவருடைய சிறுவயது கோயம்புத்தூரில் கழிந்தது. செந்தாமரை கண்ணன் – ராதா தம்பதியினருக்கு மகளாக 1992 மே 9 அன்று பிறந்தார். சாய் பல்லவி ஒரு திறமையான நடிகை மட்டுமல்ல, முறைப்படி மருத்துவம் பயின்ற ஒரு மருத்துவர்
இவருடைய தங்கை பூஜாவும் நடிப்புத் துறையில் ஆர்வம் காட்டி வருகிறார். திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பே நடனத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்த இவர், மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அந்த ஒரே படம் அவரை ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கும் பிடித்தமான ‘மலர் டீச்சராக’ மாற்றியது. பின் தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் முன்னணி நாயகியாக உயர்ந்தார்.
அதன்பின் தமிழில், மாரி 2 உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த நிலையில், சிவகார்த்திகேயனுடன் நடித்த அமரன் படம் சாய் பல்லவிக்கு பெரிய வரவேற்பை பெற்று வந்தது.
தற்போது, ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ‘ராமாயணா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதிக்கத் தயாராகிவிட்டார் சாய் பல்லவி. சாய் பல்லவி வெறும் நடிப்பில் மட்டுமல்ல, தனது கொள்கைகளிலும் மிகவும் உறுதியானவர். இதற்குச் சான்றாக அண்மையில் ஒரு சம்பவம் நடந்தது:
ஒரு பிரபலமான ஃபேர்னஸ் கிரீம் (Fairness Cream) விளம்பரத்தில் நடிக்க இவருக்கு சுமார் 2 கோடி ரூபாய் ஆஃபர் செய்யப்பட்டது. ஆனால், தனது கொள்கைக்கு முரணான அந்த விளம்பரத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார்.
திரைப்படங்களிலேயே மிகக் குறைவான மேக்கப் போடும் இவர், அழகைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கும் தயாரிப்புகளை ஆதரிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார்.
அவரது இந்த நேர்மையான முடிவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். திரையிலும் நிஜத்திலும் ஒரு தனித்துவமான ஆளுமையாக சாய் பல்லவி ஜொலித்து வருகிறார்.

