நடிகையுடன் விஜய் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக சங்கீதா கூறியது பற்றி..

நடிகையுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, “நடிகையுடனான விஜய்யின் திருமணம் மீறிய உறவை கண்டுபிடித்த பிறகு, அதனை முறித்துக் கொள்வதாக உறுதியளித்தார். இருப்பினும், திருமணம் மீறிய உறவை விஜய் தொடர்ந்து வந்தார்.

நடிகையுடன் தொடர்ந்து வெளிநாடுகளுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார். என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிடுவது எனக்கு அவமானமாக இருக்கிறது. எனக்கும் எனது குழந்தைகளுக்கும் மன உளைச்சலைத் தருகிறது.

நடிகையுடனான திருமணம் மீறிய உறவை அறிந்தபிறகு, வீட்டில் எனக்கான உரிமைகளை நிறுத்தியதுடன், கட்டுப்பாடுகளையும் விதித்தார். பொருளாதார ரீதியில் கட்டுப்பாடுகள் விதித்தார்.

திருமண, சமூக, தொழில் வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக என்னை விலக்கி வைத்துவிட்டார். 2021 முதல் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும், மனதளவிலும் உணர்வுப்பூர்வமாகவும் இருவரும் பிரிந்தே வாழ்கிறோம்.

அனைத்துத் தரப்பினரின் மதிப்பைக் காக்கும்வகையில், நடிகையின் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன். தேவைப்படுமாயின், விஜய்யுடன் திருமணம் மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2-ஆவது எதிர் மனுதாரராகவும் சேர்ப்பேன்.

நெருக்கடி ஏற்படுமாயின், விஜய்க்கும் நடிகைக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வெளியிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து மனு அளித்துள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதியில் விஜய் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Share.
Leave A Reply