ஈரான் மீதான போர், இவ்­வ­ளவு விரை­வாக இலங்­கையின் வாசலைத் தட்டும் என, யாரும் எதிர்­பார்த்­தி­ருக்க மாட்­டார்கள்.

இலங்­கைக்கு அருகே, ஈரா­னிய போர்க்­கப்­பலை குறி­வைத்தன் மூலம், இந்­தியப் பெருங்­க­ட­லிலும் ஒரு போர்­மு­னையை அமெ­ரிக்கா திறந்து விட்­டி­ருக்­கி­றது.

ஈரானின் ஐரிஸ் டெனா (IRIS Dena) என்ற அதி நவீன போர்க்­கப்பல், கடந்த 4ஆம் திகதி அதி­கா­லையில், அமெ­ரிக்க கடற்­ப­டையின் நீர்­மூழ்கிக் கப்பல் ஒன்­றினால் ஏவப்­பட்ட, எம்.கே-48 (Mark 48) டோபி­டோ­வினால் மூழ்­க­டிக்­கப்­பட்­டது.

அதி­காலை 5.08 மணி­ய­ளவில், கடலில் சட­லங்கள் மிதப்­ப­தாக மட்­டுமே தமக்கு முதலில் தகவல் கிடைத்­தது என, கடற்­படைப் பேச்­சாளர் கொமாண்டர் புத்­திக சம்பத் தெரி­வித்­தி­ருந்தார்.

உட­ன­டி­யாக விமா­னப்­ப­டையின் பீச் கிராஃப்ட் விமானம் அனுப்­பப்­பட்டு, தேடுதல் நடத்­தப்­பட்ட போது, கப்­பலின் எந்த எச்­சமும் அங்கு காணப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அது முற்­றாக மூழ்கி போயி­ருந்­தது. எண்ணெய் படலம் மட்­டுமே சம்­பவ இடத்தை அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்­கான தட­ய­மாக காணப்­பட்­டது.

உயிர்­காப்பு பட­கு­களில் சிலர் தத்­த­ளித்துக் கொண்­டி­ருந்­தனர், சிலர் கடலில் தத்­த­ளித்துக் கொண்­டி­ருந்­தனர், பல­ரது சட­லங்கள் மிதந்து கொண்­டி­ருந்­தன.

உட­ன­டி­யாக விரைந்த இலங்கை கடற்­படைப் பட­குகள் முதலில் உயிர்­தப்­பிய- காய­ம­டைந்­தி­ருந்­த­வர்­களை மீட்டு காலி கராப்­பிட்­டிய மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றன.

அதை­ய­டுத்து சட­லங்­களை மீட்­கும்­பணி தொடங்­கப்­பட்­டது. 90 சட­லங்கள் கரைக்கு கொண்டு வரப்­பட்டு பாது­காக்­கப்­ப­டு­கின்­றன.

அவற்றை ஒப்­ப­டைக்­கு­மாறு ஈரான் அதி­கா­ர­பூர்­வ­மாக கேட்­டி­ருக்­கின்­றது.

ஆனால், உட­ன­டி­யாக அவற்றை ஒப்­ப­டைப்­ப­தற்­கான பொறி­மு­றைகள் இல்லை என்று அர­சாங்கம் கூறு­கி­றது.

இலங்கைக் கடற்­ப­ரப்பில் இந்தச் சம்­பவம் இடம்­பெற்­ற­தாக, முதலில் தக­வல்கள் வெளி­யான போதும், அது இலங்கைக் கடல் எல்­லைக்குள் நடக்­க­வில்லை என, கடற்­ப­டையும், அர­சாங்­கமும் கூறி­யி­ருக்­கின்­றன.

இலங்­கையின் கடல் எல்லை- கரையில் இருந்து 12 கடல் மைல்கள் தொலைவு வரை மட்­டு­மே­யாகும்.

அதற்கு அப்பால் 200 கடல் மைல்கள் வரை­யான தூரம் பொரு­ளா­தார கடல் எல்­லையே தவிர, இலங்­கைக்கு உரித்­தான கடற்­ப­கு­தி­யல்ல.

அங்கு மீன்­பி­டிப்­ப­தற்­கான உரிமை மட்டும் இலங்­கைக்கு உள்­ளது.

காலியில் இருந்து 40 கடல் மைல் தொலை­வி­லேயே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­ற­தாக, முன்னர் தக­வல்கள் வெளி­யா­கின. ஆனால், தற்­போது 19 கடல் மைல்கள் தொலைவில் தான், இந்த சம்­பவம் இடம்­பெற்­ற­தாக அர­சாங்கம் உறுதி செய்­தி­ருக்­கி­றது.

இந்­தியக் கடற்­படை, காலியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் நடந்­த­தாக குறிப்­பிட்­டி­ருக்­கி­றது. இது ஒன்றும் மிகப்­பெ­ரிய தொலைவு அல்ல.

சுமார் 95 மீற்றர் நீள­மான- 1,500 தொன் எடை கொண்ட ஈரா­னிய போர்க்­கப்­பலில் 180 மாலு­மிகள் பணி­யாற்­றினர். அவர்­களில் பெரும்­பா­லானோர் கொல்­லப்­பட்டு விட்­ட னர்.

விசா­கப்­பட்­டி­னத்தில் நடந்த ‘மிலன் -2026 கூட்டுப் பயிற்சி மற்றும் சர்­வ­தேச கடற்­படை மீளாய்வில் பங்­கேற்­ப­தற்­காக, ஈரானில் இருந்து ஐரிஸ் டெனா போர்க்­கப்பல் வந்­தி­ருந்­தது.

பெப்­ர­வரி 26ஆம் திகதி கூட்டுப் பயிற்சி முடிந்த நிலையில், இலங்­கையில் தரித்துச் செல்­வ­தற்கு இலங்கை அர­சாங்­கத்­திடம் அனு­மதி கோரப்­பட்­டது.

அப்­போது 3 போர்க்­கப்­பல்­களை, துறை­மு­கத்­திற்கு, ஒத்­து­ழைப்பு வரு­கை­யாக, அனுப்­பு­வ­தற்கு இலங்கை வெளி­வி­வ­கார அமைச்­சிடம் ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சு அனு­மதி கோரி­யது.

அப்­போது, ஈரானில் போர் தொடங்­க­வில்லை. ஆனாலும் உட­ன­டி­யாக அர­சாங்கம் அதற்கு பதில் அளிக்­க­வில்லை.

அதை ஆராய்ந்த போது ஈரா­னியக் கப்­பல்கள், இலங்கை கடல் எல்­லைக்கு அருகில் காணப்­பட்­ட­தாக ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க கூறி­யி­ருக்­கிறார்.

ஒத்­து­ழைப்பு வரு­கைக்­கான அணு­கு­முறை அது­வல்ல என்றும், அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். இந்த நிலையில், போர் தொடங்­கி­யதால், அத­னுடன் தொடர்­பு­டைய ஒரு தரப்­புக்கு அனு­மதி கொடுப்­பது முறை­யல்ல என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இந்த நிலையில், ஈரானின் ‘ஐரிஸ் புஷேர்’ (IRIS Bushehr) போர்க்­கப்­பலில் இருந்த மாலுமி ஒருவர் உடல் நலன் பாதிக்­கப்­பட்­டி­ருந்­ததால், அவ­ருக்கு சிகிச்சை அளிக்க ஈரான் உதவி கோரி­யது.

அந்த உதவி வழங்­கப்­பட்டு, கரைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

ஈரா­னிய கப்­பல்­க­ளுக்கு அர­சாங்கம் அனு­மதி வழங்­கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கப்­பட்ட நிலையில்- காலியில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் ஈரானின் ஐரிஸ் டெனாதரித்து நின்ற போதே, அமெ­ரிக்க நீர்­மூழ்கி தாக்­கி­ய­ழித்­தி­ருக்­கி­றது.

எச்­ச­ரிக்கை எதையும் வழங்­கா­ம­லேயே அமெ­ரிக்க நீர்­மூழ்கி தாக்­கி­ய­தா­கவும், இதன் மூலம் அமெ­ரிக்கா விப­ரீ­த­மான விளை­வு­களை எதிர்­கொள்ளும் என்றும் ஈரான் தெரி­வித்­துள்­ளது.

இந்த சம்­பவம் இடம்­பெற்ற பின்­னரும் கூட, ‘ஐரிஸ் புஷேர்’ கப்­ப­லுக்கு உட­ன­டி­யாக அனு­மதி வழங்­க­வில்லை.

கிட்­டத்­தட்ட 36 மணித்­தி­யா­லங்­களின் பின்னர், கப்­பலை திரு­கோ­ண­ம­லைக்கு கொண்டு செல்­லவும், அதி­லி­ருந்த 208 பேரையும் கொழும்பு துறை­மு­கத்தில் தரை­யி­றக்­கவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­தது.

இந்த விவ­கா­ரத்தில் பல இர­க­சி­யங்கள் மறைந்­துள்­ளதால், இது­பற்றி இலங்கை அர­சாங்கம் வெளிப்­ப­டை­யாக பல விட­யங்­களை கூறத் தயங்­கு­கி­றது.

இந்­தி­யாவில் அழைப்பின் பேரில் வந்த போர்க்­கப்பல் இந்­திய பெருங்­க­டலில் மூழ்­க­டிக்­கப்­பட்­டி­ருப்­பது இந்­தி­யா­வுக்கு சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எதிர்­கா­லத்தில் இந்­தி­யாவின் அழைப்பை ஏற்று ஈரா­னிய போர்க்­கப்­பல்கள் மாத்­தி­ர­மல்ல, ஏனைய நாடு­களின் போர்க்­கப்­பல்­களும் கூட வருகை தரு­வ­தற்கு தயங்க கூடும்.

இந்த தாக்­கு­த­லுக்கு அமெ­ரிக்கா பயன்­ப­டுத்­திய நீர்­மூழ்கி எது­வென்று இன்­னமும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

ஆனால், அதில் 3 அவுஸ்­ரே­லிய கடற்­ப­டை­யினர் இருந்­தனர் என்­பதை, அவுஸ்­ரே­லியப் பிர­தமர் உறுதி செய்­தி­ருக்­கிறார்.

எம்.கே – 48 ரக டோபிடோ தான் இந்த தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை அமெ­ரிக்கா உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அமெ­ரிக்­கா­விடம் உள்ள மூன்று வகை­யான நீர்­மூழ்­கி­க­ளிலும், இதனை பயன்­ப­டுத்த முடியும்.

கப்­பலில் அடித்­த­ளத்தைத் தாக்கி, வாயு குமி­ழி­க­ளையும் அதிக அழுத்­தத்­தையும் கொண்ட அலை­களை உரு­வாக்கி, கப்­பலில் அடித்­த­ளத்தை சிதைத்து இரண்­டாக பிள­வு­ப­டுத்தும் வகையில் தயா­ரிக்­கப்­பட்ட ஆயு­தமே இது.

டோபிடோ

5.8 மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்த டோபிடோ 1,676 கிலோ எடை­யையும், 650 இறாத்தல் உயர் சக்தி வெடி­ம­ருந்­தையும் கொண்­டது. இந்த டோபிடோ, சுமார் 40 தொடக்கம் 50 கிலோ­மீற்றர் தூரம் வரை சென்று தாக்கக் கூடி­யது.

எனவே, இலங்கை கடல் எல்­லைக்கு அருகில் இருந்தே, அமெ­ரிக்க நீர்­மூழ்கி தாக்­கு­தலை நடத்­தி­யி­ருக்­கி­றது. இந்தச் சம்­பவம் இலங்­கைக்கு பெரும் நெருக்­க­டியை உரு­வாக்கி இருக்­கி­றது.

உட­ன­டி­யாக, இலங்கைக் கடற்­ப­டையும், விமா­னப்­படையும் செயற்­பட்டு மீட்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்­தாலும் – சர்­வ­தேச உடன்­பா­டு­க­ளுக்கு அமைய இலங்கை செயற்­பட்­டி­ருந்­தாலும் – அமெ­ரிக்­கா­வு­ட­னான அண்­மைக்­கால பாது­காப்பு கூட்டு தொடர்­பாக, அதிகம் கேள்­விகள் எழுந்­தி­ருக்­கின்­றன.

ஈரான் போர் தொடங்­கு­வ­தற்கு ஒரு வாரம் முன்­ன­தாக, அமெ­ரிக்க கடற்­ப­டையின் பசுபிக் கப்­பல்­படை தள­பதி அட்­மிரல் ஸ்டீபன் கோஹ்லர் இலங்­கைக்கு நான்கு நாள் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

இந்தப் பய­ணத்தின் போது அவர் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் கொழும்பு துறை­மு­கத்தின் பாது­காப்பு சூழல் குறித்தும் கலந்­தா­லோ­சனை நடத்­தி­யி­ருந்தார்.

ஈரான் மீதான தாக்­கு­த­லுக்கு இலங்­கையை தள­மாக பயன்­ப­டுத்­து­வது தொடர்­பாக ஆராய்­வ­தற்­கா­கவே, அமெ­ரிக்க பசுபிக் தள­பதி இந்தப் பய­ணத்தை மேற்­கொண்­டாரா என்ற சந்­தே­கங்­களும் முன்னர் எழுப்­பப்­பட்­டி­ருந்­தன.

அவர் இலங்கைப் பய­ணத்தை முடித்து சரி­யாக 12 நாட்­களில், ஈரா­னிய போர்க்­கப்பல் இலங்கை கடற்­ப­ரப்­புக்கு அருகே மூழ்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இது இலங்கை- அமெ­ரிக்க உற­வுகள் விட­யத்தில், வெளிப்­ப­டைத்­தன்மை தொடர்­பாக சந்­தே­கங்­களை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

அமெ­ரிக்கா நிகழ்த்­தி­யுள்ள இந்த தாக்­குதல், இந்­திய பெருங்­க­டலில் அமை­தியைக் குலைத்­துள்­ளது.

இந்­தியப் பெருங்­க­டலில், அமை­தி­யான, பாது­காப்­பான, வெளிப்­ப­டை­யான கப்பல் பாதையை உறுதி செய்­வதே தமது கொள்கை எனக் கூறி வந்த அமெ­ரிக்­காவே இன்று அதனை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அமெ­ரிக்கா ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இலங்­கை­யுடன் பேச்­சுக்­களை நடத்­து­கின்ற போது- அமை­தி­யான பாது­காப்­பான வெளிப்­ப­டை­யான கப்பல் பாதை பற்­றிய வாக்­கு­று­தி­யையே எதிர்­பார்த்­தது.

அதையே தனது கொள்­கை­யா­கவும் நிலை நிறுத்தி வந்­தது.

இந்தச் சம்­பவம் நடப்­ப­தற்கு சில வாரங்கள் முன்­ன­தாக, சீனாவில் இருந்து ஈரா­னுக்கு ஏவு­கணை தயா­ரிப்­புக்­கான பொருட்­களை ஏற்றிக் கொண்டு பய­ணித்த சரக்கு கப்பல் ஒன்றை – இலங்­கைக்கு அரு­கே­யுள்ள கடற்­ப­கு­தியில் அமெ­ரிக்க கடற்­ப­டை­யினர் வழி­மறித்து சோத­னை­யிட்­டனர்.

ஏவு­கணை தயா­ரிப்­புக்­கான பெரு­ம­ளவு கரு­விகள் மற்றும் பொருட்­களை பறித்துக் கொண்டு, அந்தக் கப்­பலை தொடர்ந்து பய­ணிக்க அமெ­ரிக்க கடற்­படை அனு­ம­தி­ய­ளித்­தி­ருந்­தது.

இது இந்­தியப் பெருங்­க­டலின் அமைதி குலையத் தொடங்­கி­ய­தற்­கான ஆரம்ப அறி­குறி தான்.

இந்தச் சம்­ப­வங்­களில், இலங்­கையின் பங்­க­ளிப்பு என்ன என்ற கேள்­வி­களும் உள்­ளன.

இலங்கை தவிர்க்க முடி­யா­த­படி அமெ­ரிக்­காவின் பாது­காப்பு வியூ­கத்­திற்குள் சிக்கிக் கொண்டு விட்டது.

அமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களும், கண்காணிப்பு விமானங்களும் , ஹெலிகொப்டர்களும் இலங்கையின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டவை அல்ல.

அவை அமெரிக்காவின் பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இலங்கைக்கு வழங்கப்பட்டவை என்பது நிரூபணமாகி வருகிறது.

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா ஒரு போர்முனையை திறந்திருப்பது, இலங்கை ஆபத்தான ஒரு சூழலில் சிக்கியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

போருக்கு அப்பாற்பட்ட ஒரு தரப்பாக- இலங்கை தன்னைக் காட்டிக் கொண்டு வந்தது.

ஆனால், இலங்கையின் நடுநிலை ஏற்கெனவே கேள்விக்குள்ளாகி விட்ட நிலையில்- போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னர், இன்னமும் கேள்விகள் அதிகரித்திருக்கின்றன.

ஈரான் மீதான போர் ஒரு வலிந்த நடவடிக்கை தான். தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அது நியாயப்படுத்தும் விதம் கவனிக்கத்தக்கது.

இது ஈரானுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல, எதிர்காலத்தில் இலங்கைக்கு கூட இவ்வாறான அச்சுறுத்தல்கள் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

-சுபத்திரா-

 

Share.
Leave A Reply