வவுனியா – புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயி ரிழந்துள்ளார். குறித்த
விபத்து சம்பவமானது நேற்று முன்தினம் நள்ளிரவு இடம்பெற் றுள்ளது.
முல்லைத்தீவில் குருநாகல் நோக்கி பயணித்த மோட் டார் சைக்கிள் முன்னே சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் துவிச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மோட்டார்
சைக்கிளின் பயணித்த மற்றையவர் பலியாகியுள்ளார்.
குருணாகல் பகுதியை சேர்ந்த உமர் லெப்பை அப் துல் ரவூப் (வயது-59) என்பவரே குறித்த விபத்தில் பலியாகியுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின் றனர்.

