சுவிற்ஸர்லாந்தின்  fribourg மாகாணத்தில்  ( Chiètres (FR) நகரில் 11 பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று நடுவீதியில் தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை (10) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 5 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

தீ விபத்து தொடர்பில் தகவலறிந்து குறித்த இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் பஸ்ஸில் முழுவதுமாக பரவியிருந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ வேகமாக பரவியதில் பஸ் முழுவதுமாக எரிந்துள்ளமை தெரியவருகிறது.

Share.
Leave A Reply