India Iran Relations News: ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 22 இந்தியக் கப்பல்களை மீட்க ஈரான் ஒரு ரகசிய நிபந்தனையை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் பிடிபட்டுள்ள ஈரானின் 3 எண்ணெய் டாங்கர்களை விடுவிக்கவும், ஈரானுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது நிறைவேறினால் இந்தியாவின் எல்பிஜி (LPG) தட்டுப்பாடு நீங்க வாய்ப்பு.

ஹோர்முஸ் ஜலசந்தி இந்திய கப்பல்: ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸில் (Strait of Hormuz) சிக்கியிருக்கும் இந்தியாவின் 22 கப்பல்கள் நிலை என்ன? இரண்டு கப்பல்கள் விடுவிக்கப்பட்டதாகத் தகவல் வந்தது.

நேற்று ஒரு கப்பல் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது. மீதமுள்ள கப்பல்களின் வருகை என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆனால் இது ஒன்று அல்லது இரண்டு கப்பல்களைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல, நம்முடைய ஒரு டஜன், அதாவது குறைந்தது 20 முதல் 22 கப்பல்கள் அங்கு சிக்கியுள்ளன. அவை அங்கிருந்து வெளியேற முடியுமா? அவற்றுக்கான வழி ஏதேனும் உருவாகிறதா? ஈரான் அரசுடன் என்ன பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது? முழு விவரங்களை பார்ப்போம்.

ஈரானின் ஆயில் டேங்கர்களை சிறை பிடித்த இந்தியா

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சிக்கியுள்ள இந்தியாவின் 22 கப்பல்கள் நிலை குறித்து ராய்ட்டர்ஸில் (Reuters) செய்தியை வெளியிட்டப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியா ஈரானைச் சேர்ந்த மூன்று ஆயில் டேங்கர்களை (Oil tankers) சிறைபிடித்தது. அப்போது போர்ச் சூழல் இல்லை.

இந்தியாவின் கடல் பகுதியில் சட்டவிரோதமாக ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்குப் பொருட்களை மாற்றியதாக (Ship-to-ship transfer) இந்தியா குற்றம் சாட்டியது.

பிடுமன் (தார்) மற்றும் எண்ணெயை இவ்வாறு சட்டவிரோதமாக மாற்றியதால், அந்த மூன்று ஆயில் டேங்கர்களும் சிறைபிடிக்கப்பட்டு தற்போது மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

இது பிப்ரவரி 15-ஆம் தேதி நடந்த விஷயம். கடலோர காவல்படையினர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகார் இன்னும் நிலுவையில் உள்ளது. ‘அஸ்பால்ட் ஸ்டார்’ (Asphalt Star), ‘அல் ஜபாரியா’ (Al Jafaria) மற்றும் ‘டெய்லர் ரூபி’ (Taylor Ruby) ஆகியவையே அந்த மூன்று கப்பல்கள் ஆகும்.

ஈரானின் நிபந்தனை?

தற்போது ஈரான் இந்தியாவிடம் ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது மும்பையில் உள்ள தங்களின் அந்த மூன்று ஆயில் டேங்கர்களை விடுவிக்க வேண்டும் என்றும், அதுதவிர தற்போது ஈரானில் போர் அழிவுகள் நடந்து வருவதால் அவர்களுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் (Medical Equipment) தேவைப்படுகின்றன என்றும் கோரியுள்ளனர்.

இந்தியா உலகளவில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகத்தில் மிகப்பெரிய நாடாகத் திகழ்கிறது.

எனவே “எங்கள் கப்பல்களை விடுவித்து, எங்களுக்குத் தேவையான மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் வழங்கினால், உங்கள் 22 கப்பல்களும் பாதுகாப்பாக வெளியேற நாங்கள் வழிவகை செய்வோம்” என்று ஈரான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது ஒரு வகையான பண்டமாற்று (Exchange) முறை போன்றது. அதாவது இந்தியா பிடித்து வைத்துள்ள மூன்று கப்பல்களை விடுவிக்க வேண்டும், பதிலுக்கு அவர்கள் கேட்கும் மருத்துவ வசதிகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு இந்தியக் கப்பல்கள் விடுவிக்கப்படும். இது தற்போது ‘அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையாக’ (Unofficial chatter) மட்டுமே உள்ளது.

இது குறித்து இந்திய அரசு தரப்பிலிருந்தோ அல்லது ஈரான் தரப்பிலிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் வரவில்லை. இது ஒரு செய்தித்தாள் அறிக்கையின் அடிப்படையில், வட்டாரங்கள் மூலம் கிடைத்த தகவலாகும்.

ஈரானின் சலுகை?

ஈரான் மற்றொரு சலுகையையும் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியா விரும்பினால் ஈரானிடமிருந்தே கச்சா எண்ணெயை வாங்கிக் கொள்ளலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஈரானின் ஆயில் டேங்கர்கள் தொடர்ந்து அந்த வழியாகச் சென்று கொண்டிருக்கின்றன. இந்தியாவில் தற்போது எல்.பி.ஜி (LPG) தட்டுப்பாடு நிலவுகிறது,

ஏனெனில் நமது தேவையில் 80% வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறோம். இந்தச் சூழலில், இந்தியா எங்களது எண்ணெயை வாங்கினால் உங்கள் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க நாங்கள் உதவுவோம் என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் அரசு தரப்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் வட்டாரங்கள் மூலமான ஊகங்களே. வெளியுறவுத் துறை அமைச்சகம் அல்லது தூதரக வட்டாரங்களில் நிலவும் பேச்சுகளின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நகர்வு என்ன?

இந்தியாவில் தற்போது எல்.பி.ஜி தட்டுப்பாட்டால் மக்கள் வரிசையில் நின்று அவதிப்படுகின்றனர்.

எனவே ஈரான், இந்தியாவுக்கு நேரடியாக எண்ணெய் மற்றும் எரிவாயுவை வழங்கவும் முன்வந்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த ‘கொடுக்கல்-வாங்கலில்’ ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், அது நாட்டுக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தரும். இந்தியாவின் எரிசக்தி நெருக்கடிக்கு ஒரு பெரிய தீர்வாக அமையும்.

கடந்த 24 மணிநேரத்தில் போர்ச் சூழலில் பெரிய மாற்றம் இல்லையென்றாலும், இந்திய வெளியுறவுத் துறை திரைக்குப் பின்னால் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. எனவ இந்தப் பேச்சுவார்த்தைகள் உண்மையாகி, சிக்கியுள்ள கப்பல்கள் இந்தியா திரும்பினால் நல்லது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. ஹார்முஸ் ஜலசந்தியில் எத்தனை இந்தியக் கப்பல்கள் சிக்கியுள்ளன?

தற்போதைய தகவல்களின்படி, சுமார் 20 முதல் 22 இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சிக்கியுள்ளன. இதில் இரண்டு கப்பல்கள் விடுவிக்கப்பட்டதாகவும், நேற்று ஒரு கப்பல் இந்தியா வந்தடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2. இந்தியா ஏன் ஈரானிய கப்பல்களை சிறைபிடித்தது?

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி, ஈரானைச் சேர்ந்த மூன்று ஆயில் டேங்கர்கள் (Oil Tankers) இந்தியக் கடல் பகுதியில் சட்டவிரோதமாக ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு பொருட்களை மாற்றியதாக (Ship-to-ship transfer) குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக இந்திய கடலோர காவல்படை அவற்றை சிறைபிடித்து மும்பை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளது.

3. சிறைபிடிக்கப்பட்ட அந்த மூன்று ஈரானிய கப்பல்களின் பெயர்கள் என்ன?

அ) அஸ்பால்ட் ஸ்டார் (Asphalt Star)

ஆ) அல் ஜபாரியா (Al Jafaria)

இ) டெய்லர் ரூபி (Taylor Ruby)

4. இந்தியக் கப்பல்களை விடுவிக்க ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகள் என்ன?
அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி ஈரான் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

மும்பையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தங்களின் 3 ஆயில் டேங்கர்களை விடுவிக்க வேண்டும். ஈரானுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை (Medical Equipment) இந்தியா வழங்க வேண்டும்.

5. இந்தியாவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்?
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திரைக்குப் பின்னால் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சிக்கியுள்ள கப்பல் ஊழியர்களின் நலன் கருதி, ஒரு சுமூகமான ‘பண்டமாற்று’ (Exchange) உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Share.
Leave A Reply