ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் உலக கிரிக்கெட் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். வெறும் 36 பந்துகளில் சதம் விளாசியது மற்றும் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது என அவர் படைத்து வரும் சாதனைகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் நிபுணர் நௌமேன் நியாஸ், சூர்யவன்ஷியின் திறமை குறித்து ஒரு வினோதமான சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

“18 வயது வீரர்களால் கூட இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம்; சூர்யவன்ஷியிடம் பலத்தை விட நுட்பம் அதிகமாக உள்ளது” என்று குறிப்பிட்ட அவர், வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை செய்வது போல, இவரது மட்டையை ஆய்வகத்திற்கு அனுப்பிச் சோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்த மட்டையினுள் ஏதேனும் செயற்கை நுண்ணறிவு சிப் (AI Chip) பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும், அதன் மூலமே அவர் இவ்வளவு துல்லியமாக பந்துகளை அடிக்கிறாரா என்பதையும் கண்டறிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நிபுணரின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தையும், அதேவேளை பலரிடத்தில் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply