சமீபத்தில், தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டை நடுங்க வைத்தது.
இது குறித்து எஸ்.வி.சேகர் அருவருக்கத்தக்க பேசிய நிலையில், பாடகி சின்மயி அவருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
எஸ்.வி.சேகர் பேசியது என்ன?
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர், தூத்துக்குடி விளாத்திகுளம் மாணவியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்து பேசினார். “ஒரு பெண் புதருக்கு பின்னால் மறைந்து நின்ற போது குற்றவாளிகள் வந்துவிட்டார்கள் என்கிறார்கள்.
அதற்காக, போலீஸ் எல்லா புதருக்குள்ளுமா லைட் வைப்பார்கள்? நம்மை நாமேதான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார். இது, சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களுக்கு உள்ளானது. இதையடுத்து, எஸ்.வி.சேகர், இதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்:
எஸ்.வி.சேகர், தன்னுடைய வீடியோவில் தன்னுடைய கருத்து தவறாக புரிந்துகொள்ள பட்டிருப்பதாகவும், இது யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடவும் என்று வீடியோவை வெளியிட்டிருந்தார்.
சின்மயி போட்ட பதிவு!
பாடகி சின்மயி, MeToo இயக்கத்திற்கு பிறகு இவரர் பெண்களுக்கான பிரச்சனைகளை எடுத்து பேசி, அதற்காக பதிவுகள் போடுவதை வழக்கமாகி வருகிறார். இவர், சமீபத்தில் எஸ்.வி.சேகரின் பேச்சிற்கும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/5OIS7OOoV9
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) March 26, 2026
எஸ்.வி.சேகரின் சர்ச்சைக்குரிய வீடியோவை பகிர்ந்துள்ள சின்மயி, அவரை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
இதை பார்க்கையில், தூத்துக்குடி விளாத்திக்குளத்தில் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண், ஏன் வனப்பகுதியில் உள்ள புதர்களுக்கு பின்னால் சென்றார் என்று எஸ்.வி.சேகர் கேட்பது போல் தெரிகிறது என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும், காவல்துறையினால் புதருக்கு லைட் போட முடியுமா என இவர் பேசியிருப்பதை அடிக்கோடிடும் அவர், கழிவறைகள் மற்றும் குளியலறைகள் இல்லாத இந்த ஊரில், அந்த பெண் தனியாக இயற்கை உபாதையை கழிக்க சென்றதாக கூறப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும், இளம் பெண்களும், சிறுமிகளும் இயற்கை உபாதையை கழிக்க செல்லும் போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது சர்வ சாதாரணம் ஆகி விட்டதாகவும், ஆனால் இது போன்ற எந்த வித அச்சமும் இன்றி விரும்பும் போதெல்லாம் பாதுகாப்பாக ஆடையின் ஜிப்பை கழற்றி சிறுநீர் கழிக்கக்கூடிய ஆண்களால், இதனை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது என்று பதிவிட்டிருக்கிறார். இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.
விளாத்திகுளம் பிரச்சனை பற்றி கனிமொழி கூறியது:
12ம்வகுப்பு பள்ளி கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வகையில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தரப்படும் – கனிமொழி எம்பி உறுதி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் 12ம்வகுப்பு பள்ளி மாணவி இயற்கை உபாதை கழிக்க கடந்த பத்தாம் தேதி வெளியே சென்ற போது, மயமானார்.
மறுநாள் 11ந்தேதி அப்பகுதியில் பாலியல் வன்கொடுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 19 ந்தேதி இந்த கொலை வழக்கு தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த மாவீரன் (எ) தர்மமூனிஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
இதையெடுத்து உடலை வாங்காமல் போராட்டத்தை ஈடுபட்டிருந்த மாணவியின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் போராட்டத்தை கைவிட்டு 20ந்தேதி மாணவியின் உடலை பெற்று, தகனம் செய்தனர்.
விளாத்திகுளம் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து ஒருத்தன் கொன்னுட்டான்.
அந்த பொண்ணு எதுக்கு புதர் பின்னாடி போச்சுன்னு கேக்குறான் இந்த திமுக ஆதரவாளர். pic.twitter.com/Pwf7myAR4g
— Krishna Kumar Murugan (@ikkmurugan) March 26, 2026
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி குடும்பத்திற்கு கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தனர்.
குற்றவாளிக்கு உட்சபட்ச தண்டனை வாங்கி தரப்படும். உங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம், கொலை செய்யப்பட்ட மாணவியின் சகோதரி கல்வி செலவு மற்றும் வேலைக்கான அனைத்து உதவியும் செய்வோம். தைரியமாக இருங்கள் என்று மாணவியின் குடும்ப த்தினருக்கு கனிமொழி எம்பி ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து கனிமொழி எம். பி. செய்தியாளர்களிடம் பேசுகையில்
பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் குடும்பத்திற்கு மன நிம்மதி தரும் வகையில் ஒரு சிறிய அமைதியை கொடுக்கும் வகையில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
நிச்சயமாக இப்படிப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உட்சபட்ச தண்டனை வாங்கித் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு , அந்த குற்றவாளிக்கு, அந்த பெண்ணிற்கு நியாயம் கிடைக்கும் வகையில் ஒரு தண்டனை வாங்கி தரப்படும்.
இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்கு சட்டங்கள் இருக்கிறது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அந்த சட்டங்கள் செயல் படுத்தப்படும் என்றார்.

