அன்;;பார்ந்த வாசகர்;களே!

கடந்த பகுதியில் ராணுவத்;தின் மத்தியில் போருக்கான உற்சாகம் குன்றியும், அதனால்
அரசாங்கத்தின் ஒரு சாரார் மத்தியில் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக பேச்சுவார்த்தைக்குப் போகலாமா? என்ற விவாதங்களும் எழுந்ததாகப் பார்த்தோம்.

ராணுவம் உற்சாகம் இழந்து சென்ற நிலையில் விடுதலைப்புலிகள் தமது பாதையில் குறிக்கிடும் எவரையும் படுகொலை செய்யும் நிலையிலிருந்ததாகவும், இதன் விளைவாக இந்தியப் பிரதமர் முதல் தமிழ் அரசியல் தலைவர்கள் வரை பலர் இரையாகினர்.

1999ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நாடு மிகவும் கொந்தளிப்பான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விடுதலைப்புலிகள் தரப்பில் சுமார் 12,000 பேரும், ராணுவ தரப்பில் 100,000 பேரும் இருந்தனர்.

கடற்படை மற்றும் விமானப்படைகளில் தலா 25,000 பேரும் பொலீஸ் சேவையில்
50,000 பேரும் பணி புரிந்தனர். இருப்பினும் இத் தொகையினரில் 90 சதவீதமானோர் வழமையான பாதுகாப்புச் சேவையிலிருந்தமையால் மிகச் சிறிய தொகையினரே போரில் ஈடுபடும் நிலையிலிருந்தனர்.

இதனால் ராணுவத்தின் மீதான பொது மக்களின் நம்பிக்கை மிகக் குறைவாகவே
காணப்பட்டது. ராணுவத்திற்கு சுமார் 132,000 பேரை இணைக்கலாம் என அனுமதி வழங்கப்பட்ட போதிலும் ஆளணி பெரும் பிரச்சனையாகவே காணப்பட்டது.

நாம் ஆரம்பத்தில் தெரிவித்தது போல விடுதலைப்புலிகள் ஆனையிறவு முகாமைத் தாக்குவதற்குத் தயாரான வேளையில் அந்த முகாமில் 12,000 துருப்புகளைக் கொண்ட 5 படை அணிகள் அங்கிருந்தன.

2000ம் ஆண்டின் முற் பகுதியில் ராணுவம் குடா நாட்டின் முழுப் பகுதிகளையும், ஆனையிறவின் கிழக்குக் கரை வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

பிரதான நிலப் பகுதியையும், குடா நாட்டையும் இணைக்கும் பகுதியான ஆனையிறவு ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்தப் பகுதி பல விதங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப் பகுதியாகும். இதன் காரணமாகவே இப் பகுதியைக் கைப்பற்ற விடுதலைப்புலிகள் தம்மைத் தயார்ப்படுத்தினார்கள்.

இவ் வேளையில் இலங்கை ராணுவத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், கொழும்பு ராணுவத் தலைமையகத்தின் பொதுத் தலைமை அதிகாரியாகவும் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டார்.

சுமார் 7 வருட காலங்கள் தொடர்ச்சியாக வடக்கிலும், கிழக்கிலும் பிரிகேட் கட்டளை அதிகாரியாகவும், பிரதேச கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்ட அவர் 2000 ம் ஆண்டு ஜனவரியில் கொழும்பிற்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் இது சிறிது காலமே நீடித்தது. 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் யாழ்ப்பாணத்தை நோக்கிய தாக்குதலில் குடா நாட்டின் கிழக்குக் கரைப் பகுதியில் ராணுவமற்ற பிரதேசத்திலிருந்து விடுதலைப்புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர்.


அங்கிருந்து புலோப்பளைப் பகுதியின் தெற்குப் பகுதியிலிருந்து ஏ 9 வழியாக முன்னேறினர். இந்த ராஜதந்திர நகர்வு பிரதான நிலப்பரப்பு வழியாக ஆனையிறவு நோக்கிய குறிப்பாக மேலதிக ராணுவம் வரும் பாதை தடுக்கப்பட்டு ஆனையிறவு தனிமைப்படுத்தப்பட்டது.

ராணுவம் இவற்றை முறியடிக்க பலமுறை எத்தனித்த போதிலும் அது சாத்தியப்படவில்லை. ஆனையிறவு முகாமை நோக்கிய விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் சுமார் 10 நாட்கள் நீடித்தது. ஏப்ரல் நடுப்பகுதியில் ராணுவத்தின் பாதுகாப்பு அரண்கள்
துவம்சமாகி முகாமை அண்மித்தார்கள்.

இத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சிறிய தொகையினராகிலும், அவர்களின் போர்த் தந்திரங்களும், உளவியல் பலமும் ராணுவத்தினரை நிலை குலைய வைத்தது.

துப்பாக்கிச் சூட்டில் ராணுவத்தினர் தடுமாறிய நிலமைகள் எதிரிக்குச் சாதகமாக அமைந்தன.
சுமார் ஒரு வார காலம் போர் நீடித்த நிலையில் பலாலியில் செயற்பட்ட வடபகுதி கட்டளை
அதிகாரியும், ஆனையிறவு பிரதேச அதிகாரியும் இத் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

இந்த நிலமைகளை ஆராய்வதற்காக அங்கு சென்ற சரத் பொன்சேகாவும், ஏனைய உயர் அதிகாரிகளும் அதனைப் பாதுகாக்க முடியாது என்பதனை ஏற்றுக் கொண்டனர்.

ராணுவ உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கொழும்பு சென்று நிலமைகளை ஆராய்ந்த பின்னர் 24 மணி நேரங்களில் ஆனையிறவு முகாமை மூடிவிட தீர்மானித்தனர்.

ராணுவத்தின் மூத்த அதிகாரிகளின் மூன்றாவது படியிலிருந்த ஒருவர் வட பகுதிக்கான கட்டளைத் தளபதியாகவும், சிறிது காலமே கொழும்பில் பணி புரிந்த சரத் பொன்சேகா 7 வருட காலம் வடக்கு, கிழக்கில் பணி புரிந்த அவர் உடனடியாகவே வடக்கு, கிழக்கிற்கான பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதன் காரணமாக உடனடியாகவே குடாநாட்டிற்கு விரைந்த அவர் ராணுவம் ஆனையிறவிலிருந்து விலகிச் செல்லும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தார்.

அவர் தென் பகுதி வழியாக ஆனையிறவை நோக்கிச் சென்ற வேளையில் பின்வாங்கிச் செல்லும் ராணுவத்தினர் மிகவும் குழப்பத்தில் ஓழுங்கற்றுச் செயற்படுவதையும் அவதானித்தார்.

சரத் பொன்சேகா

சில ராணுவ பிரிவினருக்கு முகாமிலிருந்து பின்வாங்கிச் செல்லுமாறு பணித்த தகவல்கள் கூட கிடைக்கவில்லை.

இவற்றை அவதானித்த சரத் பொன்சேகா உடனடியாகவே அதிகாரிகளை அழைத்து புலோப்பழை முதல் முகமாலை வரை பாதுகாப்பு அரண்களைத் தோற்றுவிக்கும் முயற்சியில் இறங்கினார்.

பின்வாங்கிச் செல்லும் ராணுவத்தினரை நோக்கி விடுதலைப்புலிகள் தாக்குதல்களைத்
தொடர்ந்தனர். இதனால் முகமாலையை நோக்கிச் சென்ற ராணுவத்தினர் தப்பினர். இருப்பினும் சுமார் 350 ராணுவத்தினரும், 5 படைப்பிரிவுகளின் தலைவர்களும் உயிர்களை இழந்தனர்.

இவர்களில் பலர் பின்வாங்கிச் சென்றபோது ஏற்பட்ட தாகத்தினாலும், வெப்பத்தின் தாக்கத்தினாலும் இறந்திருந்தனர்.

சுமார் 11,000 ராணுவத்தினர் ஓரளவு தப்பினர். இத் தோல்விக்குப் பிரதான காரணம் போதிய
தலைமைத்துவம் வழங்காமை குறிப்பாக மூத்த அதிகாரிகளின் அசமந்த செயற்பாடுகளால் இந் நிலமை ஏற்பட்டது.

விடுதலைப்புலிகள் பெரும் வெற்றிப் பெருமிதத்தில் திழைத்தனர். ஆனால் ராணுவத்தினரோ இன்னொரு தோல்வியால் துவண்டனர்.

இதிலுள்ள பிரதான அம்சம் எதுவெனில் இது குறித்து யாரும் பொறுப்புக் கூறும்
நிலையிலில்லை. குறிப்பாக பல பெறுமதி மிக்க ஆயுதங்கள், முகாம்களில் கைவிடப்பட்டு,
உயிர்களும் இழக்கப்பட்ட நிலையிலும் யாரும் அதற்கான பொறுப்புக்களை எடுக்கவில்லை.

இவற்றை அவதானிக்கும் போது ராணுவத்தின் உயர் அதிகாரிகளின் தரம் குறித்த மதிப்பீடு குறிப்பாக வடபகுதி நிலமைகளை மேற்பார்வை செய்த கட்டளை அதிகாரிகளின் செயற்பாடு குறித்தும் எதுவித ஆய்வுகளும் இல்லை.

இப்போது இந்தக் களைப்படைந்த, உற்சாகமிழந்த ராணுவத்திற்கு வட பகுதியின் அதி உயர் ராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக ஆனையிறவு முகாமிலிருந்து வந்த ராணுவத்தினர் உளவியல் ரீதியாக போரிடும் மன நிலையை இழந்துள்ளனர். இந்தப் பலவீன நிலையை உணர்ந்து தொடர்ச்சியான தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் தயாராகினர்.

இந்த ஆபத்தைப் புரிந்து கொண்ட சரத் பொன்சேகா ராணுவத்தைப் போரிடும் நிலைக்குத் தள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். முகமாலையில் பாதுகாப்பு அரண்களைப் பலபடுத்திய அதே வேளையில் யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

இவை யாவும் பொருத்தமான வேளையில் செய்யப்பட்டது. விடுதலைப்புலிகளும் தமது தாக்குதல்களை ஆரம்பித்தனர். குறிப்பாக யாழ். நகரத்தின் தெற்குப் புறமாகவும், தனங்கிளப்பு, சாவகச்சேரி ஆகிய பகுதிகளின் தென் பிரதேசத்திலிருந்தும் ஆரம்பித்தனர்.

ராணுவம் இங்கும் மோசமான பின்னடைவைச் சந்தித்தது. படிப்படியாக சரத் பொன்சேகாவின் தலைமையில் நிலமைகள் சீராகத் தொடங்கின.

ஏற்கெனவே ஆனையிறவு தாக்குதல்களால் பலவீனமடைந்த ராணுவம் விடுதலைப்புலிகளின் இடையறாத தாக்குதலுக்கு முகம் கொடுத்தார்கள்.

சுமார் 12,000 படை வீரர்கள் ஆனையிறவிலிருந்து பின்வாங்கிய போது அவர்கள் தமது படை அணிகளில் மீண்டும் இணைந்த போதிலும் அவர்கள் தமது சொந்த ஆயுதங்களையும்,
பல படைத் தளபாடங்களையும் கைவிட்டே வந்ததனால் போருக்கான பலம் குறைந்திருந்தது.

எண்ணிக்கையில் அதிகளவு இருப்பினும், பிரபாகரனின் ‘ஓயாத அலைகள்’ தாக்குதல்களுக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.

ஆனையிறவு தோல்வியின் பின்னர் ராணுவத்தின் அடுத்த தந்திரம் என்ன?

தொடரும்……

(இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.’: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம் (“Army Commander’s Promise to the Nation – I Shall Not Leave This War Behind to the Next Army Commander”)‘ என்ற நூலின் தமிழ் மொழிச் சுருக்கம்

மொழிபெயர்ப்பு : வி. சிவலிங்கம்

 

கிளிநொச்சியில் 500 இராணுவதினரை சுற்றி வழைத்த புலிகள்! (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.:இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம்)-பகுதி -7)

 

Share.
Leave A Reply