சென்னை: தமிழில் 90களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்தவர் மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து மகளையும் பெற்றெடுத்தார். மீனா போன்று அவரது மகளும் திரைத்துறையில் அறிமுகமானார்.

ஆனால் தெறி படத்துக்கு பிறகு அவர் வேறு எதிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் மீனா பத்து கோடி ரூபாய் இன்வெஸ்ட் செய்து 100 கோடி ரூபாய் எடுத்திருக்கிறாராம்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா ஒருகட்டத்தில் ஹீரோயினாக மாறினார். அந்தவகையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சத்யராஜ், அஜித்குமார் என 90களில் டாப் ஹீரோக்கள் முதல் வளர்ந்துவரும் ஹீரோக்கள்வரை அத்தனை பேருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

அவரது நடிப்பும், அழகும், திறமையும் அத்தனை பேரையும் கவர்ந்தது. இதனால் சரசரவென்று டாப்புக்கு சென்றார்.

அவரை பல வருடங்கள் ரசிகர்கள் தங்களது கனவு கன்னியாக கொண்டாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மீனா ஸ்பெஷல்: தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாகவே இருந்தார்

அவர். டோலிவுட்டிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடினார். கிளாமர் ரோலாக இருந்தாலும், ஹோம்லி ரோலாக இருந்தாலும் அசால்ட்டாக செய்யக்கூடியவர் அவர்.

அதேபோல் அவரது தமிழ் உச்சரிப்பும் அவ்வளவு அழகாக இருக்கும். சமயங்களில் அவர் ஹீரோயினாக மாறிய பிறகும் அவர் பேசுவது மழலை தமிழில் இருப்பதாக அதையும் ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்தார்கள்.

திருமணமும், சோகமும்:

ஒருகட்டத்தில் அவருக்கு மார்க்கெட் சரிந்த சூழலில் கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். மகள் நைனிகா விஜய் ஹீரோவாக நடித்த தெறி படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். அதற்கு பிறகு அவரை எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லை.

படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வேறு ட்ராக்கில் செல்கிறார். இதற்கிடையே மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா காலகட்டத்தில் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு மீனாவை நிலைகுலைய செய்தது. எப்படியோ அதிலிருந்து மீண்டும் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

மீனாவின் மூளை: இந்நிலையில் மீனா பற்றி தகவல் ஒன்று வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது மீனா சென்னையில் பல வருடங்களுக்கு முன்பு ஒரு வீடு கட்டினார். அதை கட்டி முடிக்க அவருக்கு மொத்தம் பத்து கோடி ரூபாய் ஆகியிருக்கிறது.

வெறுமனே செங்கல், சிமெண்ட்டை வைத்து மட்டும் கட்டாமல் வீட்டுக்குள் பழமையான கலை நயங்கள், மர தூண்கள், பெரிய முற்றம் உள்ளிட்டவைகளை வைத்து ஒரு அரண்மனை மாதிரி கட்டியிருந்தார்.

மீனாவின் வீட்டை பார்த்த அனைவருமே அதை வியக்காமல் கடந்ததில்லை.

100 கோடி ரூபாய்க்கு விற்பனை?: நவீனமயமாகிவிட்ட இந்தக் காலத்தில் பழமையான வேலைப்பாடுகளுடன் கூடிய அத்தனைக்கும் மதிப்பு எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது.

தற்போது மீனாவின் அந்த வீட்டை வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சுமார் நூறு கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டதாக தெரிகிறது.

சொத்துக்களில் முதலீடு செய்வது முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் அதை எதில் முதலீடு செய்கிறோம் என்பது. மீனா விவரமாக வீட்டில் இன்வெஸ்ட் செய்து தற்போது 100 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறார்.

 

Share.
Leave A Reply