தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் மின்சார சபையின் நட்டம் 19 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 700 மில்லியன் டொலரை வழங்க இணக்கம் தெரிவித்துள்ள போது, மின்னுற்பத்திக்கான செலவை ஈடுசெய்யும் வகையில் மின்கட்டணம் திருத்தப்பட வேண்டும் என்றும் குறைந்தப்பட்சம் 25 முதல் 30 சதவீதமளவில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதான் உண்மை இது பொய் என்றால் உண்மையான தரவுகளை ஆளும் தரப்பு முன்வைக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் இலங்கை மின்சார சபையின் நட்டம் மேலும் உயர்வடைந்துள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.இதனால் மின்கட்டணத்தை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் டொலர் நிதி விடுவிக்க இணக்கப்பாடளித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மின்சாரத்துறையில் நட்டம் ஏற்படும் போது அந்த நிதியை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையில் மின்னுற்பத்தியின் செலவை முகாமைத்துவம் செய்யும் வகையில் மின்கட்டணத்தை அதிகரக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

நெப்தா ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதாயின் 25 சதவீதத்தாலும், டீசலால் உற்பத்தி செய்யப்படுமாயின் 30 சதவீதத்தாலும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் மின்சார சபையின் நட்டம் 19 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. இதனால் மின்கட்டணத்தை 57 சதவீதத்தால் அதிகரிக்குமாறு தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளது.அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கிறேன்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 700 மில்லியன் டொலரை வழங்க இணக்கம் தெரிவித்துள்ள போது, மின்னுற்பத்திக்கான செலவை ஈடுசெய்யும் வகையில் மின்கட்டணம் திருத்தப்பட வேண்டும் என்றும் குறைந்தப்பட்சம் 25 முதல் 30 சதவீதமளவில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.இதுதான் உண்மை இது பொய் என்றால் உண்மையான தரவுகளை ஆளும் தரப்பு முன்வைக்கலாம் என்றார்.

Share.
Leave A Reply