டெல்லி: ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் எல்பிஜி தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் எப்போது வேண்டுமானாலும் சிலிண்டரை புக் செய்துக்கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது.
இப்போது இதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், டெலிவரி ஊழியர் ஒருவர், கேஸ் சிலிண்டருக்குள் தண்ணீரை ஊற்றி நிரப்பும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சில டெலிவரி ஊழியர்கள் வீட்டு விநியோக சிலிண்டர்களிலிருந்து கொஞ்சமாக கேஸை எடுத்துவிட்டு, அதற்கு பதில் தண்ணீரை நிரப்பி கொடுக்கின்றனர் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
என்னங்க நடக்குது?
ஈரான் போர் மொத்த உலகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. குறிப்பாக இந்தியா, எல்பிஜி விஷயத்தில் பயங்கரமாக அடிவாங்கியிருக்கிறது.
காரணம், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதுதான். இதன் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய எல்பிஜி சப்ளை அப்படியே முடங்கியிருக்கிறது.
எனவே கை வசம் இருக்கும் எல்பிஜியை மத்திய அரசு பார்த்து பார்த்து விநியோகித்து வருகிறது.
எல்பிஜிக்கு பதில்
தண்ணீர் இந்த சமயத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சில விநியோகஸ்தர்கள், சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இது அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில், மறுபுறம் டெலிவரி செய்யும் நபர்கள், சிலிண்டர்களிலிருந்து கேஸை எடுத்துக்கொண்டு குறைவாக கொடுக்கின்றனர். இந்த விஷயம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, எடையை ஈடுகட்ட தண்ணீரை நிரப்பி கொடுக்கிறார்கள்.
ஷாக் வீடியோ
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இப்படியான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. லக்னோவின் விகாஸ் நகரில், டெலிவரி ஊழியர் ஒருவர் சிலிண்டருக்குள் தண்ணீரை நிரப்பும் வீடியோ சோஷியல் மீடீயாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
&
Shocking video from Lucknow’s Vikas Nagar: Gas delivery boy caught pouring water into an LPG cylinder near Gulachin Temple. pic.twitter.com/qfagWzVP8V
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 15, 2026
nbsp;

