நாட்டில் கடந்த 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை யான 5 நாட்களில் 42 வீதி விபத்துக்களில் 44 பேர் உயிரிழந்துள்ள தாக போக்குவரத்து மற் றும் வீதிப்  பாதுகாப்பு பிரிவின் பிரதிப்

பொலிஸ்மா அதிபர் டபிள் யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், சித்திரைப் புத் தாண்டு தினங்களான ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 தினங்களில் மட்டும் 19 விபத்துக்கள் பதிவாகியள்ள துடன், 19 பேர் உயிரிழந் துள்ளனர்.

வாகன வகைகளின் அடிப்படையில் விபத் துக்களை பகுப்பாய்வு செய்ததில், அதிகபட்சமாக 16 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் 4 முச்சக்கர வண்டிகள், 4 வேன்கள், 2 கார்கள், 2 கெப் வாகனங்கள், 2 துவிச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு விபத்தை ஏற்ப டுத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் என்பன இதில்
உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல், 2025 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினங் களில் 25 விபத்துக்களும் 26 மரணங்களும் பதிவ டகியிருந்த நிலையில், இவ் வருடம் அந்த எண்ணிக்கை 19 ஆகக் குறைவடைந் துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த விபத்துக் களுக்கு மதுபோதையில் வாகனம் செலுத்தியமையே பிரதான காரணம் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள் யூ.பி.ஜே.சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply