அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகளை ஏற்கப்போவதில்லை என்று இரான் கூறியுள்ளது.

“தடையை விதித்து, போர் நிறுத்தத்தை மீறுவதன் மூலம், டிரம்ப் தனது கற்பனையில் இந்தப் பேச்சுவார்த்தை மேசையை ஒரு சரணடைதல் மேசையாக மாற்ற அல்லது போரை நியாயப்படுத்த விரும்புகிறார்,” என்று இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“அச்சுறுத்தல்களின் நிழலில் நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஏற்க மாட்டோம். கடந்த இரண்டு வாரங்களாக, போர்க்களத்தில் புதிய காய்களை நகர்த்த நாங்கள் தயாராகி வருகிறோம்,” என்று காலிபாஃப் கூறினார்.

அமெரிக்காவுடனான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் இரானிய தூதுக்குழுவுக்கு காலிபாஃப் தலைமை தாங்கி, பாகிஸ்தானுக்கும் பயணம் மேற்கொண்டார்.

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தனது தூதுக்குழு பாகிஸ்தான் செல்லும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஆனால், “நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை,” என்று இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் கூறியிருந்தார்.

Share.
Leave A Reply