Neeya Naana நிகழ்ச்சியில் தனது காதல் அனுபவத்தை பகிர்ந்து கவனத்தை பெற்ற யாமினி, சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பரவி வரும் தவறான தகவல்களுக்கு எதிராக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த எபிசோடில் “காதல் தோல்வியில் தவிக்கும் இளைஞர்கள்” என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில், யாமினி தனது 4 வருட காதல் அனுபவத்தை பகிர்ந்து, அந்த உறவு காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், இன்னும் அந்த நபரை மறக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பி, அவருடன் காணப்பட்ட ஒரு இளைஞரை காதலன் என கூறியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த இளைஞர் தனது தம்பி போன்றவர் என்றும், அவரை தவறாக சித்தரித்து பேசுவது அவரது வாழ்க்கையை பாதிக்கிறது என்றும் யாமினி தெரிவித்துள்ளார்.

மேலும், நிகழ்ச்சியில் பேசுவது தனிப்பட்ட அனுபவம் மட்டுமே என்றும், தன்னைப் போல மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என நம்பியே கலந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் சமூக வலைதள விமர்சனங்கள் தன்னை அதிகமாக பாதித்ததாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் மீண்டும் பரவி, ஆதரவு மற்றும் விமர்சனங்களுடன் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

Share.
Leave A Reply