காலையில் எழுந்ததும் வாயில் கசப்பு அல்லது துவர்ப்பு சுவை இருப்பது சாதாரணமாக தோன்றினாலும், அது உடல் ஆரோக்கியத்தில் உள்ள சில பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

செரிமானம் சரியாக செயல்படாதபோது அல்லது வயிற்றில் உணவு முறையாக உடையாதபோது, அதன் தாக்கம் வாயின் சுவையில் வெளிப்படலாம். இதனால் புளித்த ஏப்பம், வாய் துர்நாற்றம், பசியின்மை போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

அதேபோல், கல்லீரல் செயல்பாடு குறைந்தால் ரத்த சுத்திகரிப்பு பாதிக்கப்படும். இதனால் உடலில் நச்சுக்கள் தேங்கி, வாயில் கசப்பான சுவை ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Liver disease தொடர்பான சில ஆரம்ப அறிகுறிகளாகவும் இவை இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், இரவில் பல் துலக்காமல் தூங்குதல், நீர்ச்சத்து குறைபாடு, அதிக எண்ணெய் உணவுகள், புகைப்பிடித்தல், மதுபான பழக்கம் போன்றவை இந்த பிரச்சனையை அதிகரிக்கலாம். வைட்டமின் B12 அல்லது ஜிங்க் குறைபாடும் வாயின் சுவை மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.

இதனைத் தவிர்க்க தினமும் போதுமான தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து உணவுகள் எடுத்துக்கொள்வது, இரவில் கனமான உணவுகளை தவிர்ப்பது மற்றும் வாய்நலத்தை பாதுகாப்பது அவசியம்.

ஆனால் இந்த அறிகுறிகள் நீண்ட நாட்கள் தொடர்ந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Share.
Leave A Reply