இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழும் அட்லீ, தனது முதல் பாலிவுட் அறிமுகமான ‘ஜவான்’ படத்தின் மூலம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூலித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். இப்படத்தில் ஷாருக்கான் – அட்லீ கூட்டணிக்குக் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. தற்போது அட்லீ, அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோன் நடிக்கும் ‘ராக்கா’ (Raaka) திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்காக அவர் சுமார் ரூ. 100 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், ஷாருக்கான் தனது அடுத்த படமான ‘கிங்’ (King) பணிகளில் பிஸியாக உள்ளார். இவர்கள் இருவரும் தங்களது தற்போதைய புராஜெக்ட்களை முடித்த பிறகு, ‘ஜவான் 2’ படத்திற்காக மீண்டும் இணையவுள்ளதாகத் தெரிகிறது. முதல் பாகத்தின் கதையை விடவும் இன்னும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் இந்தப் பாகம் உருவாகத் திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்தப் புதிய அப்டேட் ஷாருக்கான் மற்றும் அட்லீ ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

