“நாம் நீலகாமம்” என்ற பெயரில் முன்னெடுக்கப்படவுள்ள அறவழிப் போராட்டத்திற்குத் தாமும், தமது கட்சியும் முழுமையான பங்களிப்பை வழங்கும் என யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நீலகாமம் தோட்டப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதலால் காயமடைந்த மற்றும் சொத்துகளை இழந்த மலையக உறவுகளுக்கு நீதி கோரியும், அவர்களின் நீண்டகாலக் கோரிக்கையான காணி உரிமையை விரைவில் வழங்க வலியுறுத்தியும் இப்போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 5-ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தச் சாத்வீகப் போராட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த சிறீதரன் எம்.பி, அட்டூழியக் கூலிப்படையின் தாக்குதலுக்குள்ளான மலையக உறவுகளுக்குத் தோளோடு தோள் நின்று துணை நிற்போம் எனக் குறிப்பிட்டார். “நாம் தோற்றவர்கள் அல்ல, எமது இலட்சியத்திற்காக மண்டியிடாமல் போராடுவோம்” என்ற நம்பிக்கையுடன் எதிர்கால இருப்பிற்காகக் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு இந்தப் போராட்டத்தை வெற்றியடையச் செய்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply