ஹோர்முஸ் நீரிணையை தனது பெயரின்படி மாற்றி புதிய வரைபடத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. மேலும், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தலைமையில் இருதரப்புக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால், ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகிறது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை தனது பெயரினால் “டிரம்ப் நீரிணை” எனப் பெயர்மாற்றம் செய்து செய்யறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட வரைபடத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஏப். 29 அன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே, செய்தியாளர்கள் உடனான சந்திப்பில் ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணை எனக் குறிப்பிட்டு அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். இதையடுத்து, அவரின் இந்தப் புதிய பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, சர்வதேச விவகாரங்களில் தனது தலையீட்டை உறுதி செய்வதற்காகவும் தனக்குப் புகழ் சூட்டும் விதத்திலும் செய்யறிவு புகைப்படங்கள் வெளியிடுவதை அதிபர் டிரம்ப் வழக்கமாகக் கொண்டுள்ளார். <

Share.
Leave A Reply