மே மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்றைய தினம் (01.05.2026) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர், எதிர்கால விலை திருத்தங்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கடந்த மார்ச் 21-ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பைத் தொடர்ந்து நடைமுறைக்கு வந்த விலைகளே தற்போதும் தொடரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே எதிர்காலத் தீர்மானங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலை விபரங்கள்:

எரிபொருள் வகை ஒரு லீற்றர் விலை (ரூபாய்)
92 ஒக்டேன் பெட்ரோல் 398
95 ஒக்டேன் பெட்ரோல் 455
ஒட்டோ டீசல் 382
சூப்பர் டீசல் 443
மண்ணெண்ணெய் 255
Share.
Leave A Reply