எண்ணெய் மற்றும் எரி­வாயு வளங்­களை மிகச்­சி­றப்­பாக கையாண்டு மிக­வே­க­மாக வளர்ந்து கொண்­டி­ருந்த நாடு­களில், உலக அரங்கில் தன்னை முன்­னி­லைப்­ப­டுத்திக் கொண்ட ஒரு நாடுதான் ஈரான்.

1970களில் உலகின் விஞ்­ஞான வளர்ச்­சியில் முன்­னேறிக் கொண்­டி­ருந்­ததும், தொலைத்­தொ­டர்பு துறை வளர்ச்­சியில் மிக விரை­வான வளர்ச்­சியை பதிவு செய்து உல­கையே தன்­பக்கம் திரும்பி பார்க்க வைத்த காலம் ஈரா­னுக்கு உண்டு.

இப்­படி உலக பார்­வையில் பல சிறப்­பு­களைக் கொண்­டி­ருந்த ஈரான், இன்று தனது பொரு­ளா­தார கட்­ட­மைப்­பையே இழந்து, புவிசார் அர­சியல் சூழ்­நி­லை­யாலும், பிராந்­திய முரண்­க­ளாலும் பகை­மையை மட்­டுமே தன்­ன­கத்தே கொண்டு இந்­நாடு தத்­த­ளித்து வரு­கி­றது எனலாம்.

நிகழ்­கால இஸ்ரேல் – ஈரான் போர் முரண்­பா­டு­களால், ஈரான் வெறு­மனே நஷ்­ட­ம­டைய போவ­தில்லை. ஈரா­னிய ஆட்சி தற்­கொ­லையை தேர்ந்­தெ­டுத்­துள்­ளது என்றே கரு­தலாம்.

புவிசார் அர­சியல் சூழ்­நிலை:

புவிசார் அர­சியல் சூழ்­நி­லையை தீர்­மா­னிக்கும்- உலக வல்­ல­ர­சுகள் இப்­போ­தைய போர்ப் பகை­மையை தமது நலன்­க­ளுக்கே முன்­னு­ரிமை கொடுப்பர் என்­பது உண்­மை­யாகும்.

ஆயினும் ஒன்று தெளி­வாக தெரி­கி­றது, ஈரா­னிய இறை­யாட்சி இப்­போது ஒரு மரண வளை­யத்­துக்குள் நுழைந்­துள்­ளது.

தெஹ்ரான் தன்னால் தாங்க முடி­யாத பிராந்­தியப் போருக்கு மத்­தியில் சோவியத் பாணி சரிவை எதிர்­கொள்ளும் அல்­லது மக்கள் புரட்­சியின் பின் இரத்­தக்­க­ள­ரியால் ஆட்சி மாற்­றத்தை எதிர்­கொள்ளும் வாய்ப்­புகள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

ஈரான் கடந்த வார இறு­தியில் ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவு­க­ணைகள் 300 க்கும் அதி­க­மா­னவை இஸ்ரேல் மீது ஏவப்­பட்­டாலும் குறிப்­பி­டத்­தக்க சேதம் அல்­லது உயி­ரி­ழப்பு எதுவும் ஏற்­ப­ட­வில்லை. என்­றாலும், இஸ்ரேல் பதி­ல­ளிக்க வேண்­டிய கட்­டா­யத்தில் உள்­ளது என போர் அமைச்­ச­ரவை கூறி­யுள்­ளது.

ஈரானின் ஏவு­கணை தாக்­குதல் தோல்­வி­யுற்ற போதிலும், ஈரான் தனது தாக்­குதல் இஸ்­ரே­லு­ட­னான மூலோ­பாய சமன்­பாட்டை மாற்­றி­விட்­ட­தாக பெரு­மை­ய­டித்துக் கொண்­டுள்­ளது. மேலும் துல்­லி­ய­மாக மூலோ­பாய சமன்­பாடு மாறி­விட்­டதால், இஸ்ரேல் பதி­ல­ளிக்க வேண்­டிய அவ­சி­யத்தில் உள்­ளது.

இஸ்ரேல் பதி­லடி சாத்­தி­யமா?

ஈரானின் தாக்­கு­த­லுக்குப் பிறகு இஸ்­ரேலின் பதி­லடி சாத்­தி­ய­மா­னது என்­பதை தெஹ்ரான் அறிந்­தி­ருக்க வேண்டும். இஸ்­ரே­லுக்குத் தெரிந்­ததைப் போலவே ஈரான் தனது பதி­லுக்கு இஸ்­ரேலைப் போலவே அதே கார­ணங்­க­ளுக்­காக பதி­ல­ளிக்க வேண்டும்.

இஸ்­ரே­லுக்கும் ஈரா­னுக்கும் இக்­கட்­டான பகு­தி­யான மத்­திய கிழக்கின் போக்­கிற்கு வல்­ல­ர­சுகள் தம் சுய நலன்­களை தீர்த்துக் கொள்வர்.

ஆனாலும் அது இஸ்­ரேலும் ஈரானும் விரும்­பாத ஒரு பரந்த பிராந்­திய மோத­லுக்கே வழி ஏற்­ப­டுத்தும். தற்­போ­தைய சூழ்­நி­லையில்

இஸ்ரேல் உட­ன­டி­யாக பதி­ல­ளிக்கும் என்று நினைக்க முடி­யாது. அத்­துடன் எப்­போது, எப்­படி, எங்கே என்­பது பற்­றிய நிச்­ச­ய­மற்ற தன்­மையும் உள்­ளது.

இஸ்­ரேலின் வல்­ல­மை­மிக்க இரா­ணுவ திறன்­களைக் கருத்தில் கொண்டு ஒரு பரந்த மோதலைத் தவிர்க்க ஈரா­னிய தரப்­பி­னரும் இறு­தியில் முயற்­சிப்பர். ஆனால் இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டு தலை­மை­களும் எத்­த­கைய ஆபத்­தான முடிவை எடுப்பர் என்­பதை இல­குவில் கூற முடி­யாது.

ஈரான் தாக்­குதல் தோல்வி்?

இஸ்ரேல் மீது கடந்த சனிக்­கி­ழமை(13) அன்று ஈரா­னின்­பு­ரட்­சி­கர காவலர் படை (IRGC) 170 ட்ரோன்­க­ளையும், 30 குரூஸ் ஏவு­க­ணை­க­ளையும், 120 பாலிஸ்டிக் ஏவு­க­ணை­களை ஈரானில் இருந்து ஏவப்­பட்­ட­தா­கவும், சில ஏவு­க­ணைகள் சிரியா, யேமன், ஈராக் ஆகிய நாடு­களில் இருந்து ஏவப்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

இந்த ஏவு­க­ணைகள் மற்றும் ட்ரோன்­களில் 99 சத­வீ­தத்தை தங்கள் இலக்­கு­களைத் தாக்­கா­த­வாறு இடை­ம­றித்­து­விட்­ட­தாக இஸ்­ரே­லிய இரா­ணுவம் கூறி­யுள்­ளது.

அதே­வேளை லெப­னானில் உள்ள ஈரான் ஆத­ரவு ஹிஸ்­புல்லா குழு, சிரி­யாவில் இருக்கும் கோலன் குன்­று­களில் இருக்கும் இஸ்­ரே­லிய ராணுவத் தளத்தின் மீது ராக்­கெட்­டு­களை ஏவி­ய­தாகக் கூறி­யி­ருக்­கி­றது.

இப்­ப­கு­தியில் இர­க­சிய தளங்­களில் இருந்து செயல்­பட்ட அமெ­ரிக்கப் படைகள் ஜோர்டான் எல்­லைக்கு அருகே தெற்கு சிரி­யாவில் ஈரா­னிய ட்ரோன்­களை சுட்­டு­வீழ்த்­தி­ய­தாகப் பாது­காப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

அத்­துடன் பிரிட்டிஷ் பிர­தமர் ரிஷி சுனக், இங்­கி­லாந்தின் விமா­னப்­படை ‘டைஃபூன்ஜெட்’ விமா­னங்கள் பல ஈரா­னிய தாக்­குதல் ட்ரோன்­களைச் சுட்டு வீழ்த்­தி­யதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். ஈரா­னிய தாக்­குதல் ஆபத்­தான மற்றும் தேவை­யற்ற செயல் என்றும், இதை கடு­மை­யாக கண்­டித்­துள்­ள­தா­கவும் ரிஷி சுனக் கூறி­யுள்ளார்.

ஈரானின் மூலோ­பாய தோல்வி:

இஸ்­ரேலும் அமெ­ரிக்­காவும் ஒரு பிராந்­திய போருக்கு ஈரானை இழுக்கும் அபா­யங்கள் நீண்­ட­கா­ல­மாக இருந்­தது. தற்­போது ஈரான் பொறுமை இழந்து இஸ்­ரேலை அதன் சொந்த மண்ணில் இருந்து நேர­டி­யாகத் தாக்­கி­யதன் மூலம் ஈரான் வெல்ல முடி­யாத ஒரு மோதலைத் தொடங்­கி­யுள்­ளது.

தெஹ்­ரானின் துணைத் தூத­ர­கத்தின் தாக்­கு­தலில் ஈரா­னிய ஜெனரல் ஒருவர் சிரி­யாவில் கொல்­லப்­பட்ட போது ஈரா­னிய தாக்­கு­தலை பதில் இல்­லாமல் கடந்து செல்ல அனு­ம­திக்க முடி­யாது என்­பது இஸ்­ரே­லுக்கு தெரியும்.

தெஹ்ரான் ஒரு­வேளை விரைவில் அணு ஆயு­தங்­க­ளுடன் கிழக்கில் சிரி­யா­வி­லி­ருந்து மற்றும் வடக்கில் லெப­னானில் உள்ள ஹெஸ் பைல்­லா­வி­லி­ருந்து ஒருங்­கி­ணைந்த தாக்­கு­தலை மேற்­கொள்ள வாய்ப்­புள்­ளது.

இன்று, ஒரு முழு­மை­யான பிராந்­திய யுத்தம் ஏற்­பட்டால் அமெ­ரிக்­காவின் ஆத­ரவை ஜெரு­சலேம் முழு­மை­யாக பெறும். வேறு­வார்த்­தை­களில் கூறு­வ­தானால், இந்த போரில் ஜெரு­சலேம் பின்­வாங்க வாய்ப்­பில்லை போல புலப்­ப­டு­கி­றது.

ஈரானில் 60 சத­வீத மக்கள் வறு­மையில்:

எண்ணெய் மற்றும் எரி­வாயு வணிகம் மூலம் உலகின் மிக முக்­கிய பொரு­ளா­தார நாடாக இருந்த ஈரான், இன்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அதேவேளை 60 சதவீத மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

ஈரான் நாட்டில், முக்காடு அணிய மறுப்பது எதிர்ப்பின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறியுள்ளது. இனியும் இஸ்லாமிய புரட்சிகர நோக்கத்தில் நம்பிக்கை வைக்க ஈரானியர்களை வசப்படுத்துவது இனி இலகுவான நோக்கமாகத் தெரியவில்லை.

தற்போது ஈரான் பொருளாதார கட்டமைப்பையே இழந்து, புவிசார் அரசியல் சூழ்நிலையாலும், பிராந்திய முரண்களாலும் பகைமையை மட்டுமே தன்னகத்தே கொண்டு இந்நாடு தத்தளித்து வருகிறது எனலாம்.

-ஐங்­கரன் விக்­கி­னேஸ்­வரா-

Share.
Leave A Reply