தற்போது கடலில் உள்ள இரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் அதை பெரும்பாலான நாடுகளுக்கு விற்க முடியும்.

உலக சந்தையில் எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருப்பதே அமெரிக்காவின் இந்த முடிவின் நோக்கமாகும்.

அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “இந்தக் குறுகிய கால அங்கீகாரம், சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உலகச் சந்தைகளில் நுழைய அனுமதிக்கும்” என்று கூறினார்.

இந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் எந்தவொரு நிதிப் பலன்களையும் இரான் “பெறுவது கடினமாக இருக்கும்” என்று பெசண்ட் கூறினார்.

“இந்த அங்கீகாரம், ஏற்கெனவே வந்துகொண்டிருக்கும் எண்ணெய்க்கு மட்டுமே கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது,

மேலும் புதிய கொள்முதல் அல்லது உற்பத்தியை இது அனுமதிக்காது. இதன் விளைவாக, எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருக்க, இரானின் பீப்பாய்களையே அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவோம்,” என்று பெசண்ட் கூறினார்.

போர் தொடங்கியதிலிருந்தும், மத்திய கிழக்கில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான இரானியத் தாக்குதல்களைத் தொடர்ந்தும், எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 112 டாலரை எட்டியுள்ளது;

Share.
Leave A Reply