இராக்கில் உள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் (Islamic Resistance) என்ற ஆயுதக் குழு, கடந்த 24 மணி நேரத்தில் 27 நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதில் “இராக் மற்றும் பிராந்தியத்தில் உள்ள எதிரி இலக்குகளுக்கு எதிரான” டஜன்கணக்கான ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களும் அடங்கும் என்றும் கூறியுள்ளது.
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்க தூதரகத்தின் மீது மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எங்களுக்குத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது.
அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் தூதரக மற்றும் தளவாட மையத்தின் மீது குறைந்தது மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்குத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மூன்றாவது தாக்குதலுக்குப் பிறகு அந்தத் தளத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டதை ஓர் அதிகாரி ஏஎஃப்பி-யிடம் உறுதிப்படுத்தினார்.
சில நாட்களுக்கு முன்புதான், இராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது பல ஆளில்லா விமான மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; கடந்த வாரமும் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது.

