தெல்லிப்பழை, அலவெட்டி பகுதியில் நடைபாதை வழியாக சென்ற நபரொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை(22) இரவு இடம்பெற்றுள்ளது.

அலவெட்டி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், அவர் தற்செயலாகக் கிணற்றில் விழுந்தாரா அல்லது இது ஒரு கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply