இரான் அணு ஆயுதங்கள் பெற அனுமதிக்கப்படக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

1973-ஆம் ஆண்டின் அமெரிக்க போர் அதிகாரச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபரால் 60 நாட்கள் வரை ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

அதன்பிறகு அந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் அல்லது நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். மேலும் அந்தச் சூழ்நிலைக்கு அவசர ராணுவ பாதுகாப்பு தேவைப்பட்டால் கூடுதல் 30 நாட்கள் கோரலாம்.

ஆனால் இந்தப் போரை தொடர்வதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி தேவையில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் தற்போது முடிவடைந்துவிட்டது. ஆனால் இரான் உடனான மோதலை அமெரிக்கா விரைவில் முடித்துவிடாது. ஏனெனில் அப்படிச் செய்தால் சில ஆண்டுகள் கழித்து இதே பிரச்னையை மீண்டும் சந்திக்க நேரிடலாம்,” என்றார்.

உலகிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அனைத்து ஆயுதங்கள், முதன்மையாக அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்கா முயற்சிக்கும் என்று டிரம்ப் கூறினார்.

இரானின் அணுசக்தி திட்டத்தை இலக்கு வைப்பது ஒரு “முக்கியமான நகர்வு” எனக் குறிப்பிட்ட அவர் அது மேற்கொள்ளப்படவில்லை என்றால் “இரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கின் இதர பகுதிகளையும் அழிக்கும்.” எனத் தெரிவித்தார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர்நிறுத்தம் இருந்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

Share.
Leave A Reply