யாழ்ப்பாணத்தில் மதுபானத்தின் பாவனை 2009 இன் பின்னர் பல மடங்குகள் அதிகரித்துள்ளன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மதுவரித் திணைக்களத்தின் ஆதாரங்களின்படி 2009 இல் யாழ்ப்பாணத்தில் 7 இலட்சத்து 62 ஆயிரத்து 610 லீற்றர் பியர் நுகரப்பட்டது. அதுவே 2013 இல் ஐந்து மடங்கால் அதிகரித்து 40 இலட்சத்து 56 ஆயிரத்து 999 லீற்றர் பியர் நுகரப்பட்டது.

தற்போது இது இரண்டு அல்லது மூன்று மடங்கால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்று வெளிநாட்டு மதுபான வகைகளின் நுகர்வு 800 வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

2009 இல் வெளிநாட்டு வகை 6 ஆயிரத்து 598 லீற்றர் மதுபான வகைகள் நுகரப்பட்டன. ஆனால் 2013 இல் 61 ஆயிரத்து 134 லீற்றர் வெளிநாட்டு மதுபான வகைகள் நுகரப்பட்டன எனத் தெரியவந்துள்ளது.

மேலும் 2009 இல் 5 இலட்சத்து 67 ஆயிரத்து 756 லீற்றர் மதுபானம் அருந்தப்பட்டது. இது 2013 இல் 20 இலட்சத்து 19 ஆயிரத்து 434 லீற்றராக அதிகரித்தது.

கள்ளின் நுகர்வும் 2009 ஐ விட 2013 இல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2009 இல் இதன் நுகர்வு 30 இலட்சத்து 51 ஆயிரத்து 959 லீற்றர்களாகவும், 2013 இல் 56 இலட்சத்து 63 ஆயிரத்து 60 லீற்றர்களாக உயர்வடைந்தது.

2015 இன் புள்ளிவிவரங்கள் கிடைக்கப்பெறாத போதும் ஒட்டுமொத்தமாக மதுபானத்தின் நுகர்வு 2013 இலும் விட பன்மடங்கு அதிகரித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

பெண்ணின் கையை பிடித்து இழுத்தவர் கைது!!
15-06-2015
article_1434371275-aaயாழ்.புலோலி தெற்குப் பகுதியில் பெண்ணொருவரின் கையைப் பிடித்து இழுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தையல் கடை உரிமையாளரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா,  திங்கட்கிழமை (15) உத்தரவிட்டார்.

பிறந்த தினத்துக்கு உடுப்புத் தைப்பதற்காக, கடந்த 13ஆம் திகதி தையல் கடைக்கு சென்ற பெண்ணை, தையல் கடைக்காரர் கையைப் பிடித்து இழுத்து, தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.

பிடியிலிருந்து நழுவிய பெண், இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

சந்தேகநபருக்கு பிணை வழங்காமல் விளக்கமறியலில் வைத்தால்தான் இவ்வாறான தவறுகள் நடைபெறாது என்று பருத்தித்துறை பொலிஸார் நீதவானிடம் கோரியிருந்தமைக்கமைய நீதவான் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அந்தரங்க உறுப்பில் உதைத்த ஆசிரியர்

article_1434369632-kickingமாணவன் ஒருவனின் அந்தரங்க உறுப்பில் ஆசிரியர் ஒருவர் உதைத்தமையினால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

அங்கு பிரபல பாடசாலையொன்றில் 10 ஆம் வகுப்பில் கல்விக்கும் மாணவனே இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் பாடசாலையில்  சிரமதானம் செய்யும்போது, மேற்படி மாணவன் சிரமதானம் செய்யாமல் நின்றதாகவும் அதனை  அவதானித்த குறித்த ஆசிரியர்,  சப்பாத்து காலால் மாணவனை உதைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் அணிந்திருந்த சப்பாத்தின் முன்பக்கத்தின் கூர்மையான பகுதி மாணவனின் அந்தரங்க உறுப்பில் பட்டமையால் அதிகளவான இரத்தம் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு  சாவகச்சேரி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகின்றது.  இது தொடர்பில் மாணவனின் பெற்றோர், வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

Share.
Leave A Reply