யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவரும், திருமணமாகி சுவிஸ்லாந்தில் வசிப்பவருமான குடும்பப் பெண் கடந்த 14ம் திகதி சுவிஸ்லாந்திலிருந்து இலங்கை வந்துள்ளார்.

அதன் பின்னர் கட்டுநாயக்காவில் இருந்து யாழ்பாணத்திற்கு அவரை ஏற்றி வருவதற்காகச் சென்ற அவரது தம்பியையும் மீறி, அவர் இன்னொரு இளைஞனுடன் கட்டுநாயக்காவில் இருந்து மாயமாகி உள்ளதாகத் தெரிய வருகின்றது.

சுவிஸ்லாந்தில் தனது கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு அவரது பேச்சையும் மீறியே குறித்த பெண் இலங்கை வந்துள்ளார். வரும் போது பெருமளவு பணம் மற்றும் நகைகளையும் கொண்டு வந்ததாகத் தெரிய வருகின்றது.

கடந்த 2011ம் ஆண்டு திருமணமாகி சுவிஸ்லாந்து சென்ற 27 வயதான குறித்த பெண்ணிற்கு, யாழ்பாணத்தில் காதலன் இருந்ததாகவும் தெரிய வருகின்றது.

அவனுடன் இருந்த தொடர்பை சுவிஸ்லாந்தில் இருந்து தொடர்ந்து பேணிக் கொண்டிருந்ததாகவும், இது கணவருக்குத் தெரியவந்து மனைவியை எச்சரித்து அவளது குடும்பத்தினருக்கும் இது தொடர்பான தகவல்களையும் கணவன் வழங்கியிருந்தார்.

இந் நிலையில் காதலனின் தொடர்பை விடமுடியாத குறித்த பெண் தொடர்ந்தும் கணவருடன் முரண்பட்டுக் கொண்டிருந்து, பின்னர் கடந்த 14ம் திகதி இலங்கைக்கு திரும்பி வந்ததாகவும் தெரியவருகின்றது.

தற்போது சுவிஸ் பெண் தொடர்பு அவளது பெற்றோருக்கும் இல்லாததால் அவர்கள் பெரும் கவலையடைந்துள்ளதாகவும், தாயார் இதனால் கடும் நோய்வாய்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்தி மூலம் தாயாரின் நிலையை அறிந்து குறித்த பெண் தனது தாயுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என அவர்களது உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தனது காதலை மதிக்காது கட்டாயப்படுத்தி சுவிஸ் மாப்பிளைக்கு செய்ததாக கருதும் பெண் நிலையை தற்போது தாங்கள் உணர்ந்துள்ளதாக பெற்றோர் தமது குடும்ப நண்பா்ககுக்கு தெரிவித்துள்ளனா்

Share.
Leave A Reply