யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமி 5 மாதங்கள் கர்ப்பமாகிய நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது | Suspect Arrested Abusing 15 Year Old Girl Jaffna அவர் குறித்த சிறுமியை பல தடவைகள் துஷ்பிரயோகம் செய்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Author: owner
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் பெற்றோர் சண்டையால் 19 வயது மாணவி உயிரை மாய்த்துள்ள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் துயர சம்பவம் கடந்த 9ம் திகதி இடம்பெற்றுள்ளது. யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயும் தந்தையும் வீட்டில் சண்டை பிடித்ததாகவும் இதனையடுத்தே குறித்த மாணவி உயிர்மாய்த்ததாகவும் அயலவர்கள் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.
“பிரம்மோஸ் வெறும் ஏவுகணை அல்ல. நமது ராணுவ வலிமையின் சின்னம், எல்லையைப் பாதுகாப்பதற்கான தீர்வு” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மே 11 அன்று லக்னோவில் நடந்த, பிரம்மோஸ் வான்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதியின் தொடக்க விழாவில் கூறினார். இந்த சோதனை வசதி இந்தியாவின் திறன்களை மேலும் வலுப்படுத்தும் என்று ராஜ்நாத் கூறினார். இன்று உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வின் போது, சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல்களின் போது பிரம்மோஸ் பயன்படுத்தப்பட்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்தார். பாகிஸ்தான் கப்பலை குறிவைக்கப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை பிரம்மோஸ் என்றும், அவை தற்போது லக்னோவில் தயாரிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார். விளம்பரம் “சமீபத்திய ஆபரேஷன் சிந்தூரில் பிரம்மோஸ் ஏவுகணையின் சக்தியை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் அதைப் பார்க்கவில்லை என்றால், பாகிஸ்தானிடம் கேளுங்கள்” என்றும் யோகி…
ஆசிரியையான மனைவியுடன், பாடசாலை மாணவன் உல்லாசமாக இருந்ததை, ஆசிரியையின் கணவன், ஜன்னல் வழியாக பார்த்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ் பேட்டையில் வசிக்கும் லட்சுமணன் (32) இறால் பண்ணை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். அவர் தினந்தோறும் இரவில் தனது இரால் பண்ணைக்கு காவலுக்கு சென்றுவிட்டு அதிகாலையில்தான் வீடு திரும்புவார். இந்த நிலையில் லட்சுமணன் மனைவி நாகலட்சுமி (28) தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கல்லூரியில் படிக்கும் மணிகண்டா (23)என்ற மாணவருடன் நாகலட்சுமிக்கு கள்ளக்காதல் இருந்து வந்தது. மணிகண்டாவும் நாகலட்சுமியும் பலமுறை ரகசியமாக வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் மே.13ஆம் திகதி இரவு லட்சுமனன் இறால் பண்ணைக்கு சென்றபோது மணிகண்டாவை வீட்டிற்கு வரவழைத்த நாகலட்சுமி தனது 7 வயது மகனை வீட்டில் வைத்து கொண்டே இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். இரவில் வழக்கம் போல் இறால் பண்ணைக்கு சென்ற…
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் ஜம்முவைச் சேர்ந்த 11 வயதான இரட்டையர்கள் உயிரிழந்தனர். பிறக்கும்போது இரட்டையர்களாக பிறந்த இவர்கள், சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் ரமீஸ். இவரது மனைவி உர்ஷா. இவர்களுக்கு உர்பா பாத்திமா, ஜைன் அலி என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தன. இவர்கள் இருவரும் 5 நிமிட இடைவெளியில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் திகதி பிறந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பாத்திமா, ஜைன் அலியும் இறந்தனர். இதுகுறித்து இருவரின் தாய்மாமாவான ஆதில் பதான் கூறும்போது, “பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை கிராமங்களில் இருந்த 27 பேர் உயிரிழந்தனர். அதில் உர்பா பாத்திமாவும், ஜைன் அலியும் அடங்குவர். கடந்த 7-ம் திகதி தொடர்ச்சியாக பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசித் தாக்கியது. இரட்டையர்களாகப் பிறந்து இணை பிரியாமல் வசித்து…
இந்த ஆண்டு முழுவதும் பதிவான வீதி விபத்துகளில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் வீதி விபத்துகளில் இந்த இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காலகட்டத்தில், 902 போக்குவரத்து விபத்துகளும் பதிவாகியுள்ளன. இதன்போது, 1,842 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை பல விபத்துகளுக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர். போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றயதரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று (15) இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், வவுனியா மாநகரசபையில் சங்கு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும். அதேபோல வவுனியா தெற்கு, வடக்கு, செட்டிகுளம் பிரதேசசபைகளில் தமிழரசுக்கட்சி கூடிய ஆசனங்களை பெற்றுள்ளமையினால் நாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி தங்களது பூரண ஆதரவினை வழங்குவதாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடே தற்போது ஏற்ப்பட்டுள்ளது. சபைகளின் தவிசாளர் பிரதி தவிசாளர்களை நியமிப்பது எங்களுக்கு சிறிய பிரச்சனை. சபைஅமைக்கும் சந்தர்ப்பத்தில் அதனை எங்களுக்குள் பேசி தீர்மானித்துக்கொள்வோம். அத்துடன் சிலகட்சிகள் மற்றும்…
இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றக் கட்டடத்தொகுதி, தியவன்னா ஓயா உள்ளிட்ட வளாகம் வெசாக் அலங்காரங்கள் மற்றும் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டது. சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட செயலாளர் குழுவின் வழிகாட்டலில் பாராளுமன்ற இணைப்புப் பொறியியலாளர் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய பிரிவுகள், பாராளுமன்ற பணியாளர்களின் பௌத்த சங்கம் மற்றும் இலங்கை இராணுவம் இதற்கான பங்களிப்பை வழங்கியிருந்தன. இதேவேளை, இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கை பாராளுமன்றத்தினால் பாராளுமன்ற வளாகத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தியவன்னா பௌத்த பக்தி கீதம் நிகழ்வு’ மே 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 6.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“வங்கதேச முன்னாள் அதிபரும் அவாமி லீக் தலைவருமான முகமது அப்துல் ஹமீத் தாய்லாந்துக்கு விமானம் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் அந்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. டாக்கா போஸ்ட்’டின் படி, ஹமீத் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3:00 மணிக்கு தனது மனைவி, சகோதரர் மற்றும் மைத்துனருடன் தாய் ஏர்வேஸ் விமானத்தில் ஏறினார். ஒரு காலத்தில் சக்திவாய்ந்த அதிபராக இருந்தவர் தப்பிக்கும்போது வெறும் லுங்கி மட்டும் அணிந்திருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அவர் தப்பிச் செல்வது பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ஹமீத் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பியது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 81 வயதான முகமது அப்துல் ஹமீது, 2013 முதல் 2023 வரை வங்கதேசத்தின் அதிபராக இருந்தார்.…
நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த 4 இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடி கொண்டிருந்தவேளை கடல் நீரினால் அள்ளுண்டு சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஆகியோரின் உதவியோடு சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர்களில் மூவர் பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், 17 வயதான உதயகுமார் ஸ்ரீதரன், 19 வயதான ஸ்ரீகாந்த் சரன்ராஜ், 18 வயதான ஸ்ரீகாந்த் அஜித்குமார் மற்றும் 27 வயதான யூசுப் வென்னப்புவ போலஸ்வத்த ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை சடலமாக மீட்கப்பட்டர்களுள் ஸ்ரீகாந்த் சரன்ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித்குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை…