தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா ஜெய­ராமை அவ­தூ­றுக்கு உட்­ப­டுத்தும் வகையில் பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­த­ளத்தில் கட்­டு­ரையை வெளியிட்டவருக்கு எதி­ராக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அவ­ருக்கு எதி­ராக உள்­ளக மட்­டத்தில் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வது உறு­தி­யா­னது என்றும் பாது­காப்பு அமைச்சின் பேச்­சா­ளரும் இரா­ணுவப் பேச்­சா­ள­ரு­மான பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய  தெரி­வித்தார்.

அத்­துடன் தமி­ழ­கத்தில் நேற்று வரை நீடித்த குறித்த விட­யத்­துக்கு எதி­ரான எதிர்ப்பு போராட்­டங்கள் புதி­தா­னவைஅல்­ல­வெ­னவும் தமி­ழ­கத்தின் கடந்­த­கால மன நிலை­யையே இப்­போ­ராட்­டங்கள் தற்­போதும் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுரை ஒன்றில் தமி­ழக முதல்வர் ஜெய­ல­லித்­தாவை அவ­தூறு செய்யும் வித­மாக கருத்­துக்கள் இருப்­ப­தாக கூறியும் அதற்கு இலங்­கையின் ஜனா­தி­பதி பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கோர­வேண்டும் எனவும், இனிமேல் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­றாத வண்ணம் உறு­தி­யான நட­வ­டிக்­கைகள் அவ­சியம் எனவும் குறித்த கட்­டு­ரை­யா­ள­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்கக் கோரியும் நேற்று தமி­ழ­க­மெங்கும் பாரிய எதிர்ப்புப் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. கேசபிரி­கே­டியர் ருவான் வணிக சூரிய மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தமிழ் திரை உல­கினர்,அ.தி.மு.க. வினர்,தமி­ழக வழக்­க­றி­ஞர்கள், எம்.ஜி.ஆர்.முன்­னேற்­றக்­க­ழ­கத்­தினர் உள்­ளிட்ட பல தரப்­பி­னரும் நேற்று தமி­ழ­க­மெங்கும் போராட்­டங்­களை மேற்­கொண்­டனர்.

அத்­துடன் நேற்று முன் தினம் திருச்­சியில் உள்ள � லங்கன் எயார்லைன்ஸ் நிறுவ­னத்தின் கிளை அலு­வ­லகம் ஒன்றின் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­த­துடன் நேற்­றைய தினம் இலங்­கை­யி­லி­ருந்து சென்ற 15 வய­துக்கு உட்­பட்ட தேசிய கிரிக்கட் அணி சென்னை விமான நிலை­யத்­தி­லி­ருந்து இலங்­கைக்கு திருப்பி அனுப்­பப்­பட்­டி­ருந்­தனர்.

தமி­ழ­கத்தில் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள போராட்­டங்கள் மற்றும் எதிர்ப்­புகள் எமக்கு ஒன்றும் புதி­தல்ல. கடந்த வரு­டங்­களில் இவ்­வா­றான ஏரா­ள­மான எதிர்ப்­புக்­க­ளுக்கு நாம் முகம் கொடுத்­துள்ளோம்.

இலங்­கையின் இரா­ணுவ, கடற்­படை வீரர்­க­ளுக்கு தமி­ழக எல்­லைக்குள் பயிர்­சிகள் மற்றும் கருத்­த­ரங்­குகள் நடத்­தப்­ப­டு­வதை அவர்கள் எதிர்த்­தனர். அத்­துடன் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் இந்­தியன் பிறீ­மியர் லீக் போட்­டி­களில் கடந்த ஆண்டு பங்­கு­பற்­றவும் தமி­ழ­கத்­தி­லி­ருந்து எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது.

இதனால் இலங்கை வீரர்கள் தமி­ழ­கத்தில் விளை­யாட முடி­யாத நிலை ஏற்­பட்­டது. இலங்­கை­யி­லி­ருந்து இந்­தி­யா­வுக்கு செல்லும் இலங்கை பிர­ஜை­களும் பாது­காப்­பற்ற சூழல் ஒன்­றுக்கு முகம் கொடுத்­தி­ருந்­ததை மறுக்க முடி­யாது.

இந் நிலையில் இப்­போ­ராட்­டங்கள் ஒன்றும் எமக்கு புதி­தல்ல. அவை தமி­ழ­கத்தின் பழைய மன நிலையை அப்­ப­டியே படம்­பி­டித்­துக்­காட்­டு­கின்­றன. அவர்­க­ளது மன நிலை­யையே அவை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

குறித்த கட்­டு­ரை­யையை வெ ளியிட்டமை தொடர்பில் நாம் மன்னிப்பு கோரினோம். அதனை இணையத்திலிருந்தும் நீக்கிவிட்டோம். அந்த கட்டுரையை எமது அனுமதியின்றி பிரசுரித்த நபருக்கு எதிராக அமைச்சு மட்டதில் நடவடிக்கை எடுத்துள்ளோம். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சு குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அமைச்சு என்ற ரீதியில் அதனை நாம் முன்னெடுத்துள்ளோம் என்றார்.

Share.
Leave A Reply