ரஜி­னி­காந்தின் ‘அர­சியல் பிர­வேசம்’ என்­பது ஒரு புதி­ரா­கவே இருந்து வரு­கி­றது. சில நேரங்­களில் அர­சி­ய­லுக்கு வரு­வது போன்று பேசு­கிறார். பின்பு அர­சி­யலில் ஈடு­பாடு இல்லை என்­கிறார்.

ஆனால் அவ்­வப்­போது எதை­யா­வது பர­ப­ரப்­பான கருத்­துக்­களைத் தெரி­வித்து அவ­ரது ரசி­கர்­க­ளையும் தமி­ழக மக்­க­ளையும் குழப்பி விடு­கிறார். இது இன்று நேற்­றல்ல நீண்ட கால­மா­கவே இடம்­பெற்று வரு­கி­றது.

இந்­தி­யாவின்  கோவாவில் கடந்த 20 ஆம் திகதி 45 ஆவது இந்­திய சர்­வ­தேச திரைப்­பட விழா ஆரம்­ப­மா­னது. இதில் கலந்து கொள்­வ­தற்­காக தனது மனைவி லதா­வுடன் சென்ற ரஜினி கோவாவின் பனாஜி விமான நிலை­யத்தில் சென்று இறங்­கிய போது அவரைத் தனியார் தொலைக்­காட்சி ஒன்று பேட்டி கண்­டது.

அப்­போது தொலைக்­காட்சி நிரு­பரின் கேள்­விக்கு பதி­ல­ளித்த ரஜி­னிகாந்த் ‘நான் இப்­போ­தைக்கு அர­சி­யலில் ஈடு­ப­ட­மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். அத்­துடன் அர­சியல் பற்றி மேலும் பேசு­வ­தற்கு விரும்­ப­வில்லை’ என்றும் அவர் தெரி­வித்­தி­ருக்­கிறார். இதன் மூலம் அவர் அரசியலில் இறங்­கு­வ­தற்கு விருப்­ப­மில்­லா­த­வரைப் போலவே காணப்­ப­டு­கிறார்.

இதே­வேளை, கடந்த 16 ஆம் திகதி சென்­னையில் இடம்­பெற்ற ‘லிங்கா‘ திரைப்­பட இசை வெளி­யீட்டு விழாவில் பேசிய அவர் ‘அர­சி­யல்­பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும்.

அதன் ஆழம் ஆபத்து பற்­றியும் தெரியும். யார் யாரின் தோளை மிதித்து அங்கு செல்ல வேண்டும் எனவும் தெரியும். இத்­தனை பாடு­பட்டு அர­சி­ய­லுக்குச் சென்றால் அங்கு நினைத்­ததை எல்லாம் செய்ய முடி­யுமா என்று சந்­தே­க­மாக இருக்­கி­றது.

அர­சி­யலை நினைத்து பயப்­ப­ட­வில்லை. அதன் ஆழத்தை நினைத்தே பயந்து கொண்­டி­ருக்­கிறேன். அர­சி­யலைப் பற்றி நான் பேச­வில்­லை­யென்றால் திமிர் என்­றாகி விடும். எது­வாக இருந்­தாலும் சரி அதை கட­வுள்தான் முடிவு செய்வார்’ என்று பிடி­கொ­டுக்­காமல் பேசி­யி­ருக்­கிறார்.

அர­சி­யலில் இறங்க ஆர்­வ­மாக இருப்­பது போல பேசி­னாலும் பின்னர் தயக்­க­மாக இருப்­ப­தாக கூறு­கிறார். இதனால் ரஜி­னியை அர­சி­ய­லுக்கு இழுக்க வேண்டு­மென்று முயற்­சிப்­ப­வர்­க­ளுக்கும் அவ­ரது ரசி­கர்­க­ளுக்கும் குழப்­பத்­தையும் அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அர­சி­ய­லுக்கு வரு­வதா? இல்­லையா? என்­பது பற்றி ஒரு உறு­தி­யான தெளி­வான பதிலை இது­வரை ரஜி­னிகாந்த் தெரி­விக்­க­வில்லை என்­பது புதி­ராக உள்ளது. இது கடந்த 15 வரு­டங்­க­ளா­கவே தொடர்ந்து இடம்­பெற்று வரு­கி­றது.

காங்­கி­ர­ஸி­லி­ருந்து கருப்­பையா மூப்­பனார் விலகி தமிழ் மாநில காங்­கி­ரஸை ஆரம்­பித்தார். அப்­போது அவர் தி.மு.க.வுடன் கூட்­டணி அமைத்து தமி­ழக சட்டப்­பே­ரவைத் தேர்­தலில் போட்­டி­யிட்டார். அந்தக் கூட்­ட­ணிக்கு ஆத­ர­வாக அப்­போது ரஜி­னிகாந்த் பேசினார். அந்தத் தேர்­தலில் அந்தக் கூட்­டணி பெரும் வெற்றி பெற்­றது.

இப்­போதும் கூட காங்­கி­ர­ஸி­லி­ருந்து வெளி­யேறி தனிக்­கட்சி அமைத்­துள்ள முன்னாள் மத்­திய அமைச்­சரும் மறைந்த கருப்­பையா மூப்­ப­னாரின் மகனுமான ஜி.கே. வாசன் அந்த தேர்­தலை கணக்கில் வைத்தே தமது புதிய கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு ரஜி­னி­யிடம் கோரிக்கை விடுத்து வரு­கிறார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

எனினும் ரஜி­னிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்­படம் தொடர்பில் பாட்­டாளி மக்கள் கட்­சியின் நிறு­வுனர் ராம­தா­ஸுக்கும் ரஜி­னிக்கும் இடையில் எழுந்த பிரச்சினையைத் தொடர்ந்து அப்­போ­தைய காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற தேர்­தலில் பார­தீய ஜன­தா கட்­சிக்கு (பா.ஜ.க.) வாக்­க­ளிக்­கும்­படி ரஜினி தமி­ழக மக்களை கேட்­டுக்­கொண்­டி­ருந்தார்.

ஆனால், தமி­ழக மக்கள் பா.ஜ.க.வுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­வில்லை. ரஜி­னியின் வேண்­டுகோள் எடு­ப­டாமல் போனமை குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த லோக்­சபா (பாரா­ளு­மன்ற) தேர்­த­லிலும் கூட பா.ஜ.க. ரஜி­னியின் ஆத­ரவை நாடி­யது. பா.ஜ.க. சார்பில் பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட தற்­போதைய பிர­தமர் நரேந்­திர மோடி ரஜி­னி­காந்தின் வீடு தேடிச்­சென்று அவ­ரது ஆத­ரவைக் கோரி­யி­ருந்தார்.

தேர்தலில் அகில இந்­திய அளவில் பா.ஜ.க. வெற்றி பெற்­றாலும் தமி­ழ­கத்தைப் பொறுத்­த­ளவில் பா.ஜ.க. பெறுந்­தோல்­வி­ய­டைந்­தது. இதில் அ.தி.மு.க பெரும் வெற்­றி­யீட்­டி­யது.

இது பா.ஜ.க தலை­வர்கள் மத்­தியில் பெருந்­தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. எனவே, தமி­ழ­கத்தில் திரா­விடக் கட்­சி­களின் ஆதிக்­கத்தை ஒழிப்­ப­துடன் பா.ஜ.க. வின் ஆட்­சியை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்று உறுதி கொண்­டது.

அதன் அடிப்­ப­டை­யி­லேயே ரஜி­னியை பா.ஜ.க. வில் இணைத்­துக்­கொள்­வ­தற்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, பிர­தமர் மோடி ஆகியோர் தொலை­பே­சியில் ரஜி­னி­காந்­துடன் பேசி­ய­தாக தக­வல்கள் வெளி­யா­கின. மட்­டு­மன்றி கர்­நா­டக மாநி­லத்தின் முன்னாள் முத­ல­மைச்சர் எடி­யூ­ரப்பா மற்றும் ஈஸ்­வ­ரப்­பாவும் ரஜி­னியை நேரில் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.

பா.ஜ.க. தமி­ழக மாநில தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள தமி­ழிசை சௌந்­த­ரா­ஜனும் கூட ரஜி­னியின் வீட்­டுக்கு சென்றார். தொடர்ந்தும் ரஜி­னியை கட்சிக்குள் இணைத்து கொள்ள முயற்சி செய்து வந்தார்.

பா.ஜ.க. வுக்குள் ரஜி­னியை வளைத்துப் போட்டு 2016 இல் நடை­பெ­ற­வுள்ள தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் ­தேர்­தலில் தமி­ழ­கத்தின் ஆட்­சியைப் பிடிப்­பதே பா.ஜ.க. வின் திட்­ட­மாக இருக்­கி­றது.

எனினும் பா.ஜ.க. வில் சேர்ந்து கொள்­வது பற்றி ரஜினி இது­வரை எந்­த­வித கருத்­தையும் வெளி­யி­ட­வில்லை. எனினும் லிங்கா படப்­பி­டிப்பு முடிந்­த­வுடன் தமது முடிவை தெரி­விப்­ப­தாக கூறி வந்தார்.

ஆனால் சொத்­துக்­கு­விப்பு வழக்கில் சிறை சென்று திரும்­பிய முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தா­வுக்கு வாழ்த்து தெரி­வித்து ரஜினி அறிக்கை விட்­டதால் பா.ஜ.க. தரப்பு பின்­வாங்கிக் கொண்­டது. ‘சீச்சீ இந்­தப்­பழம் புளிக்கும்’ என்ற கதை­யா­கிப்­போ­னது.

எந்­த­வொரு கட்­சி­யி­ன­ரையும் ரஜி­னிகாந்த் பகைத்­துக்­கொள்­ளா­த­வ­ரா­கவே காணப்­ப­டு­கிறார். தி.மு.க. தலைவர் கரு­ணா­நி­தி­யுடன் நெருங்­கிய நட்­பினைக் கொண்­டி­ருக்­கிறார். அது போலவே விஜ­யகாந்த், வைகோ, காங்­கிரஸ் தலை­வர்கள் உள்­ளிட்ட அனை­வ­ரு­டனும் சுமு­க­மான உறவைக் கொண்­டி­ருக்­கிறார்.

ஒவ்­வொரு கட்­சி­யி­னரும் ரஜி­னியின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­வதில் போட்டி போட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. தமி­ழக காங்­கிரஸ் தலைவர் ஈ.வி. கே.எஸ். இளங்­கோவன் அர­சி­ய­லுக்கு ரஜினி வரக்­கூ­டாது என்­கிறார்.

அதே­வேளை தமிழ் மாநில காங்­கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமது கட்­சிக்கு ஆத­ரவு வழங்க வேண்­டு­மெனக் கூறு­கிறார். அதேவேளை பா.ம.க. நிறு­வுனர் ராமதாஸ் அர­சி­யலில் ஈடு­பட ரஜி­னிக்கு உரிமை இருக்­கி­றது. அவர் அர­சி­யலில் ஈடு­ப­டலாம் என்­கிறார். தமி­ழக தலை­வர்கள் சிலரும் கூட சந்­தர்ப்­பங்­க­ளுக்கு ஏற்­ற­வாறு பேசு­கின்­றனர்.

இந்த நிலையில் கோவாவில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் 45 ஆவது இந்­திய சர்­வ­தேச திரைப்­பட விழாவில் ரஜி­னி­காந்­துக்கு சிறந்த திரை­யு­லக பிர­மு­க­ருக்­கான ‘இந்­திய சினிமா நூற்­றாண்டு விருது’ வழங்­கப்­பட்டு கௌர­விக்­கப்­பட்­டுள்ளார். இந்த விரு­தினைப் பெறு­வ­தற்கு அனைத்து வகை­யிலும் ரஜினிகாந்த் தகு­தி­யு­டை­யவர் என்­ப­துடன் அவரால் தமி­ழக திரை­யு­ல­குக்கு பெருமை சேர்­கி­றது.

இதுவும் கூட ரஜி­னியை தன்­பக்கம் இழுப்­ப­தற்கு பா.ஜ.க. செய்த ஒரு தந்­திரம் எனப் பேசப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றா­யினும் அர­சி­ய­லுக்கு வரு­வதில் தனக்கு இஷ்டமில்லை என்று ரஜினி கூறி­யி­ருப்­பது அவரை தத்­த­மது கட்­சிக்குள் வளைத்­துப்­போட முயன்ற தலை­வர்­க­ளுக்கும் ரஜி­னியின் ரசி­கர்­க­ளுக்கும் பெருத்த ஏமாற்­றத்தை அளித்­துள்­ளது என்றே எண்­ணத்­தோன்­று­கி­றது.

எவ்­வா­றா­யினும் அவர் தமது எண்­ணத்தை மாற்­றிக்­கொண்டு எதிர்­கா­லத்தில் அர­சி­யலில் ஈடு­ப­டலாம் என்­ற­தொரு கருத்தும் நில­வு­கி­றது. தான் அர­சி­யலில் ஈடு­ப­டு­வது பற்றி ‘காலமும் கட­வுளும் தான் தீர்­மா­னிக்க வேண்டும்’ என்ற வச­னத்­தையும் அவர் அடிக்­கடி பயன்­ப­டுத்தி வரு­கிறார். எனவே, காலம் கைகூடினால் அவர் அரசியலில் ஈடுபடலாம்.

பல்­வேறு கட்­சிகள் அவரை இணைத்­துக்­கொள்ள முயற்சி செய்­தாலும் ரஜி­னி­காந்தின் ரசி­கர்­களின் விருப்பம் வேறாக இருக்­கி­றது. அதா­வது தற்­போ­துள்ள எந்தக் கட்­சி­யிலும் சேரக்­கூ­டாது. புதி­தாக கட்சி ஆரம்­பித்து அதன் மூலம் தமி­ழக ஆட்­சியை கைப்­பற்ற வேண்டும் என்­பதே அந்த விருப்பம்.

காலம் பதில் சொல்­கின்­ற­போது ரஜி­னிகாந்த் புதிய கட்சி ஆரம்­பிப்­பாரா? அல்­லது ஏதா­வது ஒரு கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வாரா? அவ­ரது ஸ்டைலில் சொல்ல வேண்­டு­மானால் ‘காலந்தான் பதில் சொல்ல வேண்டும்’.

நல்லதம்பி நெடுஞ்செழியன்

Share.
Leave A Reply