சென்னை: ஹன்சிகா செலவை கண்டபடி உயர்த்தி தயாரிப்  பாளர்களை கண்கலங்க வைக்கிறாராம். ஹன்சிகா கோலிவுட்டின் பிசியான ஹீரோயின் ஆவார்.

அவர் பெரிய தொகையை சம்பளமாக கேட்பதுடன் குறிப்பிட்ட ஸ்டார் ஹோட்டல்களில் தான் தங்குவேன் என்று கறாராக கூறுகிறாராம். படபப்பிடிப்புக்கு அவர் தன்னுடன் 10 உதவியாளர்களை அழைத்து வந்து செலவை கண்டபடி உயர்த்துகிறாராம்.

அந்த 10 பேரும் எப்பொழுது பார்த்தாலும் ஹன்சிகாவுடன் இருப்பதால் அவகர்களுக்கு சேர்த்து தயாரிப்பாளர்கள் செலவு செய்ய வேண்டி உள்ளதாம்.
ஹன்சிகாவின் பயணம், தங்குமிடம், உணவு ஆகிய செலவுகளுடன் 10 உதவியாளர்களுக்கும் செலவு செய்ய வேண்டியதை நினைத்து தயாரிப்பாளர்கள் வருத்தப்படுகிறார்களாம்.
முன்னணி நடிகைகள் 2 உதவியாளர்களுடன் வருவார்கள். ஆனால் இவர் 10 பேருடன் வருகிறாரே என்று தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம்.
இந்நிலையில் ஹன்சிகா தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் ரூ.2 கோடி சம்பளம் கேட்கத் துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஹன்சிகா தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Hansika-5

இணையத்தை கலக்கும் நடிகை ஹன்சிகாவின் குளியல் வீடியோ

Share.
Leave A Reply

Exit mobile version