சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா இருவர் குறித்த இதுவரை வெளிவராத புதிய ‘வீடியோவை’ தன் மகள் வைத்திருந்ததுதான் தன் மகளின் மர்ம மரணத்துக்குக் காரணம் என்று திருச்சி பெண்ணின் தாய் ஜான்சிராணி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் ஜான்சிராணி தம்தியினர். இவர்களது 24 வயது மகள் சங்கீதா. பி.சி.ஏ., படித்த இவர் கர்நாடகா மாநிலம், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் துறவி பயிற்சிக்கு சேர்ந்தார்.

இந்நிலையில் கடந்த, 28ந் தேதி, ஆசிரமத்தில் மர்மமாக இறந்தார். தனது மகள் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாகவும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஜான்சி ராணி பெங்களுரு ராம்நகரம் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

பின்னர் பெங்களுருவில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோ ஏற்கன்வே வெளியானது.

அதே மாதிரி மற்றொரு வீடியோவை எனது மகள் தனது லேப்டாப் மற்றும் பென் டிரைவில் வைத்திருந்தார். அதனுடன் ஊருக்கு வந்தாள். சங்கீதா ஊருக்கு வந்தவுடன் பிடதி ஆசிரமத்தில் இருந்து அம்சானந்தா மற்றும் சிலர் வந்தனர்.

அவர்கள் சங்கீதாவின் லேப்டாப் மற்றும் பென்டிரைவை வாங்கி அதில் இருந்தவற்றை அழித்தனர். எங்களை நித்தியானந்தாவிடம் அழைத்துச் சென்றனர்.

அங்கு நித்தியானந்தா என்னிடம், நானும் ரஞ்சிதாவும் இருந்த வீடியோவை வெளியிட்டாங்க. அந்த வீடியோ வைத்தே என்னை ஒண்ணும் பண்ண முடியல.

உன் பொண்ணு லேப்டாப்ல இருக்கும் வீடியோவை வைத்து என்ன பண்ண முடியும் என்று மிரட்டினார். என் மகளை தனிமை சிறையில் அவர் அடைத்தார்.

நடிகை ரஞ்சிதா என் மகளை பளார் என்று அறைந்தார். நித்தியானந்தாவின் தவறான நடவடிக்கைகளை வெளி உலகத்துக்கு காட்டாமல் ஓய மாட்டேன்.

நித்தியானந்தா தவறான செய்கையில் ஈடுபடுகிறார் என்பதற்கான நிறைய ஆதாங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் இப்போது சொன்னால் ஆசிரமத்தில் தங்கியிருக்கக் கூடிய எனக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லோருக்கும் பாதிப்பு வரும்.

அதனால் இப்போது அதை நான் சொல்லவில்லை. விரைவில் இதுபற்றிய உண்மைகளை வெளியிடுவேன். இவ்வாறு ஜான்சிராணி கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version