‘பிரமிட்’ என்ற வார்த்தை இன்று எகிப்து தேசத்தின் அடையாளமாகக் காணப்படுகிறது. எகிப்தை தெரியுமோ இல்லையோ? நிச்சயம் பிரமிட் பற்றி எல்லோருமே தெரிந்து வைத்திருப்பார்கள். எகிப்து என்றவுடன் நம் கண்களின் முன்னால் விரிபவை பிரமிட்டுக்கள்தான்.
பிரமிட்டானது சாதாரண மக்களை மட்டுமல்ல, பொறியியல் வல்லுநர்களையும் வியக்க வைக்கும் கட்டிடக்கலையாகும். ஏழு உலக அதிசயங்களில் பிரமிட்டும் ஒன்றாகும்.
பிரமிட் என்றால் கூம்பு வடிவம். அடிப்பகுதி சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும்.
எகிப்தியர்கள் கி.மு. சுமார் 2500ஆம் ஆண்டளவில் மனிதனின் இறப்பிற்குப் பிறகும் வாழ்க்கை உண்டு என நம்பினர். எனவே எகிப்தில் மன்னர்கள், மகாராணிகள், மந்திரிகள், குருமார்கள், இறந்த பின்பு அவர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், பொருட்கள் ஆகியவை இறப்பிற்கு பிந்திய வாழ்விற்கு அவர்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டன.
இறந்த பிறகும் வாழ்க்கை உண்டு என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால் எகிப்திய மன்னர்கள் இறந்த பின்பு, அவர்களது உடல்களை பதப்படுத்தி இந்த பிரமிட்களில் மம்மிகளாக வைத்தனர்.
மன்னர் உயிருடன் இருந்தபோது மன்னர் பயன்படுத்திய விலை உயர்ந்த ஆபரணங்களாகிய வைரம், தங்கம்,வெள்ளி மற்றும் உணவு தானியங்கள் ஆகியவை அவரது இறப்பிற்கு பிந்திய வாழ்க்கைக்காக அவருடன் சேர்த்து புதைக்கப்பட்டன.
மன்னர்கள், மகாராணிகள், மந்திரிகள், மத-குருமார்கள் ஆகிய அனைவருக்கும் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப தனித்தனியே மன்னருக்கு அருகாமையிலேயே பிரமிட்கள் கட்டப்பட்டன.
கி.பி. 1879ஆம் ஆண்டுகளில் சஹாரா பாலைவ னத்தில் பிரமிட்கள் இருக்கும் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த எகிப்தியர் ஒருவரை பார்த்து பயந்த நரி ஒன்று அருகில் இருந்த பிரமிட்டிற்கு அடியில் ஓடி ஒளிந்துள்ளது.
இதை பார்த்து வியப்படைந்த அந்த எகிப்தியர், நரி சென்ற வழியில் சென்று பார்த்த போது அங்கு ஒரு சுரங்கம் இருந்துள்ளது.
அந்த சுரங்கத்தினுள் சென்று பார்த்தபோது அங்கு அவர் பிரமாண்டமான அதிசயத்தை பார்த்துள்ளார். தங்கத்தினாலும் வைரம் மற்றும் நீலக்கற்களால் கட்டப்பட்ட மண்டபம் ஒன்றை அவர் பார்த்துள்ளார். பின்பு அவர் தான் கண்ட இவ்வதிசயத்தை மற்றவர்களுக்கும் தெரிவித்தார்.
அதற்குப் பிறகு பிரமிட்டிற்குள் புதைந்திருந்த இரகசியங்களும் மர்மங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்தொடங்கின.
இந்த பிரமிட்கள் இரண்டரை மில்லியன் சுண்ணாம்புக் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளன. இந்த பிரமிட்களில் உள்ள ஒவ்வொரு கல்லும் 2 தொன் எடை கொண்டதாகும்.
இதில் நமக்கு ஆச்சரியம் என்னவென்றால் எகிப்து தேசத்திலுள்ள ஒவ்வொரு பிரமிட்டும் அதன் கட்டமைப்பில் 1 டிகிரிக்கும் குறைவாக வடதுருவத்தின் நேர்கோட்டில் அமைந்துள்ளது.
எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் இந்த அதிசயம் எப்படி என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
இப்பிரமிட்கள் 4500 ஆண்டுகளுக்கு முந்தியது என்றும் இதன் அருகே உள்ள ஸ்பிங்ஸ் எனப்படும் சிலை 12,000ஆம் ஆண்டுகளுக்கு முந்தியது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
‘டியூட்மகாமும’ என்ற இளவரசனின் சவப்பெட்டிதான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ‘டியூட்மகாமும’ இளவரசனின் உடல்தான் உலகின் முதல் மம்மி ஆகும். மம்மி என்பது பதப்படுத்தப்பட்ட உடலாகும்.
கீசா, நெக்ரொப்போலிஷ் எனப்படும் கீசா பிரமிட் தொகுதி எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் எல்லை பகுதியில் கிசா மேட்டுநிலப் பகுதியில் உள்ளது.
பண்டைய கால நினைவுச்சின்னங்களை உள்ளடக்கிய இப்பகுதி நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது. பழைய கிசா நகரத்திலிருந்து 5 மைல் தொலைவில் உட்புறமாக பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது.
இது கெய்ரோவின் மத்தியிலிருந்து தென்மேற்காக 15 மைல் தொலைவில் உள்ளது. இந்த நெக்ரொப்போலிஷ் நகரம் பல பிரமிட்களை உள்ளடக்கிய தொகுப்பாக உள்ளது.
கூஃபுனின் பிரமிட் எனப்படும் பெரிய பிரமிடும், காஃபா பிரமிட் எனப்படும் சிறிய பிரமிடும் இவற்றிற்கு தென்மேற்கில் 100 மீற்றர் தொலைவில் நடுத்தர அளவுள்ள மென்காவின் பிரமிட்களும் இதன் தென்மேற்கில் 100 மீற்றர் தொலைவில் சில சிறிய பிரமிட்களும் உள்ளன.
ஸ்பிங்ஸ் எனப்படும் மனிதத்தலையும் சிங்க உடலும் கொண்ட சிலை இப்பகுதியின் கிழக்கில், கிழக்கு திசையை பார்த்தபடி உள்ளது.
இன்றைய எகிப்தியர்கள் இந்த ஸ்பிங்ஸ் சிலை காஃப்ரேயுடையது என்று நம்புகின்றனர். இந்த அரச குடும்பத்து சிலைகளுடன் பல உயர் நிலை அரச அதிகாரிகளின் சிலைகளும் காணப்படுகின்றன.
ஹெலனியக் காலத்தில் சீடோனின் அன்டிப்பேட்டர் இங்குள்ள பெரிய பிரமிட்டை உலக அதிசயங்களுள் ஒன்றாக பட்டியலிட்ட பின்னர் இப்பகுதி உலகப் புகழ் பெற்றுள்ளது.
கிஸா (புணைய) நகரில் இருக்கும் பெரிய பிரமிட் சுமார் 476 அடி உயரமானது, 13.6 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டது 5,90,712 கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கம்ப்யூட்டர் கணக்கீடுகள் சொல்கின்றன.
கற்களின் எடை ஒவ்வொன்றும் இரண்டில் இருந்து முப்பது தொன் வரையுள்ள இந்தக் கற்களை தூரத்திலிருக்கும் மலைப் பகுதிகளிலிருந்து எப்படிக் கொண்டு வந்தார்கள்?
உச்சியை எட்டும்போது கற்களை 400 அடிகளுக்கு மேல் தூக்கிக் கொண்டு போயிருக்க வேண்டுமே? அவர்களிடம் கிரேன் மாதிரி எந்திரம் இருந்ததா?
ஒரு லட்சம் தொழிலாளிகள் இருபது வருடம் பணியாற்றியிருந்தால் மட்டுமே பெரிய பிரமிட் உருவாகியிருக்கும் என்பது கட்டடக் கலை வல்லுநர்களின் கணிப்பு ஆகும்.
இன்று சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் நுழைவு வாயிலானது கி.பி.820 இல் கலிப் -அல்-மாமுமின் வேலையாட்களால் தோண்டப்பட்ட திருடர்கள் ‘ சுரங்கமாகும்.
இந்த சுரங்கப்பாதையானது ஏறு பாதையை அடையும் வரை சுமார் 27 மீட்டர் தூரம் சென்று இடது புறம் திரும்புகிறது. ஏனெனில் அப்பகுதியின் கற்களை அகற்றமுடியாததால் அதை சுற்றியுள்ள மென்மையான சுண்ணாம்பு கற்களை சுற்றி சென்று ஏறும் பாதையை அடைகின்றது.
இந்தப் பிரமிட்களுக்குள் ராஜா ராணிகள், முக்கியஸ்தர்கள் ஆகியோரின் மறைவுக்குப்பின் மம்மிகளாக, உடல் கெடாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன. பிரமிட்களின் கூம்பு வடிவம் இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். வீடுகளை சாதாரணமாக, சதுர, செவ்வக வடிவங்களில் கட்டியவர்கள், பிரமிட்களை மட்டும் கூம்பு வடிவத்தில் கட்டினார்கள்.
இதனை ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகள் செய்த பரிசோதனைகளின் அடிப்படையில் தரும் விளக்கங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
பிரமிட் வடிவ அறைக்குள் காய்கறிகள், பழங்களை வைத்தால், மற்ற அறைகளில் வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்களைவிட அதிக நாட்கள் கெடாமல் இருக்கின்றன.
பிரமிட் வடிவக் கட்டடங்களில் தூங்குபவர்களுக்கு, சாதாரண அறைகளில் தூங்குபவர்களைவிட, அதிகம் புத்துணர்ச்சி கிடைக்கிறது. பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் இறந்த ஒரு பூனையின் உடலை, மரத்தால் செய்த பிரமிட் வடிவப் பெட்டிக்குள் வைத்தார்கள்.
பல ஆண்டுகளான பின்னும் இந்த உடல் கெட் டுப் போகவில்லை. பிரமிட் வடிவ அறைக்குள் இரு க்கும் இரும்புப் பொருட்கள் எளிதாகத் துருப் பிடி ப்பதில்லை. கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப் புறத்தி லிருந்து ஒரு வித மின்காந்த ஆற்றலை உள் வாங்கு கிறது.
பிரமிட்டின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை, பிரமிட் டின் உள்பகுதியில் ஒரே சீராகப் பரவ வைக்கிறது. இதுதான் இரகசியம் என்கிறார்கள்.
பல ஆயிரம் ஆண் டுகளுக்கு முன்னால், எகிப்தியர்களுக்கு இந்த விஞ்ஞான உண்மை எப்படித் தெரிந்தது, புரிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.
– பரீட் இக்பால்