ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியின் கீழ் சஸ்டெயினபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க் (Development Solutions Network (SDSN), மேற்கொண்ட உலக மகிழ்ச்சி தரவரிசைப் பட்டியலில் சுவிட்ஸர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே, கனடா ஆகிய நாடுகள் இருக்கின்றன.
டோகோ, சிரியா, புருண்டி, பெனின், ருவாண்டா ஆகிய நாடுகள் கடைசி ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
கல்லப் வேர்ல்டு போல் என்ற கருத்துக் கணிப்பில் கிடைத்த தர மதிப்பீடுகள், தனிநபர் வருவாய், ஆரோக்கியமான வாழ்நாள், ஊழல், சமூக சுதந்திரம் ஆகியவற்றைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
158 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 117வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா பதினைந்தாவது இடத்தையும் பிரிட்டன் 21வது இடத்தையும் சிங்கப்பூர் 24வது இடத்தையும் பிடித்துள்ளன.
“சமூக முன்னேற்றத்தின் அளவீடாக, மகிழ்ச்சியைக் கருதுவது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. பல நாடுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் மகிழ்ச்சிக்கான பட்டியலை வைத்து, மக்களுக்கு எப்படி மேம்பட்ட வாழ்வை அளிக்க முடியும் என ஆராய்கின்றன” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அறிவுத் துறை, அரசு, தனியார் துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் இந்த ஆய்வின் முடிவுகள் 2012ல் முதன்முதலாக வெளியிடப்பட்டன.