ஜப்பானை சேர்ந்த ரியுஜி இமய் என்ற 5 வயது சிறுவன், இந்த சிறு வயதிலேயே குங்பூ கலையில் வல்லவரான மறைந்த புரூஸ் லீயைப் போல் ‘நுன்சாக்கு’ கட்டையை சுழற்றி அசத்துகிறான்.
பின்னணியில் உள்ள ஒரு பெரிய டி.வி.யில் புரூஸ் லீயின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘கேம் ஆப் டெத்’ படத்தில் இடம்பெறும் உச்சகட்ட சண்டைக்காட்சி ஓட, இந்த வாண்டும் அதேபோல் நுன்சாக்கை சுழற்றும் வேகத்தையும், முகபாவத்தையும் பார்த்தால் இறந்துப்போன புரூஸ் லீ கூட வியந்து அசந்துப் போவார்.
இந்தக் காட்சியை சிறிய வீடியோ தொகுப்பாக உருவாக்கியுள்ள ரியுஜி இமய்-யின் தந்தை அதை கடந்த வெள்ளிக்கிழமை ‘யூ டியூப்’பில் வெளியிட்டுள்ளார்.
இதுவரை சுமார் 30 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து, வியந்து, பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் அள்ளி கொட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, இவனுக்கு பேஸ்புக்கில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான அபிமானிகளும் உருவாகியுள்ளனர்.