ஐரோப்பாவிலேயே அதிக அளவில் தனி நபர்கள் துப்பாக்கிகள் வைத்துள்ள நாடு எது? என்று கேட்டால் நிச்சயமாக யாரும்  சுவிட்சர்லாந்து என்று பதில் சொல்லமாட்டார்கள்.

ஆனால், அதுதான் உண்மை. அதிக அளவில் துப்பாக்கிகளை வைத்துள்ள அந்நாட்டு மக்கள் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டு எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

செல்வச் செழிப்புக்கும், அமைதிக்கும், அழகான பனி மலைகளுக்கும், சுற்றுலாவுக்கும் பெயர் போனது சுவிட்சர்லாந்து.

அந்த நாட்டில் 100 பேருக்கு 47 துப்பாக்கிகள் வீதம் இருப்பதாக கூறப்படுகிறது.

8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் 3.4 மில்லியன் துப்பாக்கிகள் உள்ளன. இதுதான் ஐரோப்பாவிலேயே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா வீடுகளிலும் துப்பாக்கிகள் இருந்தாலும் அதன்மூலம் ஏற்படும் இறப்பு என்பது மிகவும் குறைவுதான்.

சராசரியாக ஒரு லட்சம் பேரில் 3 பேர் துப்பாக்கிகள் மூலம் கொல்லப்படுகிறார்கள்.

இது அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கு 10.3 பேராக உள்ளது.

மிகச்சிறிய நாடான சுவிட்சர்லாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 34 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆண்களும் ராணுவ சேவைசெய்ய வேண்டும் என்பது கட்டாயம்.

எப்போது வேண்டுமானாலும் நாட்டைக் காக்க தயாராக இருக்கும் வகையில் அரசே அனைவருக்கும் ஒரு கைத்துப்பாக்கி அல்லது ரைபிள் துப்பாக்கியை கொடுத்துள்ளது.

போதைப் பொருட்கள், வறுமை போன்ற பிரச்சனைகள் இல்லாதால் அந்நாட்டு மக்கள் துப்பாக்கிகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

Vals,_Switzerland

Vals, Switzerland

Beautiful Places To See- Bernese Oberland, Switzerland

Share.
Leave A Reply

Exit mobile version