முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலை வாரம் எழுச்சியுடன் ஆரம்பம்: யாழ்.பல்கலையிலும் உணர்வு
முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலை வாரம் எழுச்சியுடன் ஆரம்பம்:யாழ்.பல்கலையிலும் உணர்வு பூர்வ அஞ்சலி
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ்மக்களுக்காக ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் பொதுச்சுடரேற்றி இறந்தவர்கள் நினைவு கூரப்பட்டனர்.
இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்,து.ரவிகரன்,பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மேரி கமலா குணசீலன், வலி.வடக்குப் பிரதேச சபையின் உபதவிசாளர் எஸ்.சஜீவன், வல்வெட்டித் துறை நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கோ.கருணானந்தராசா ஆகியோர் நேரில் கலந்து கொண்டு பொதுச்சுடர்கள் ஏற்றி நினைவுரைகள் ஆற்றி முள்ளி வாய்க்கால் இனப் படுகொலை வாரத்தின் முதல்நாளை எழுச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.
இதேவேளை,இறுதிப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சுடரேற்றி உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.