புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களின் விபரங்களை “அதிரடி”க்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பகிரங்கப்படுத்துகின்றோம்.
1. பூபாலசிங்கம் இந்திரகுமார் – புங்குடுதீவு, பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 13.04.1976
2. பூபாலசிங்கம் உதயகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 14.08.1981
3. பூபாலசிங்கம் சசிகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் பிறந்த திகதி 29.07..1984
4. மகாலிங்கம் சசிந்தன் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 25.05.1984
5. தில்லைநாதன் சந்திரகாந்தன் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 13.08.1983
6. சிவதேவன் துசாந்தன் – புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 06.03.1991. இவர் வேலணைப் பிரதேச சபையில் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.
7. நிசாந்தன் என்னும் பரணி ரூபசிங்கம் குகநாதன் – புங்குடுதீவ பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 28.04.1989 இவர் வசிக்குமிடம் நாவலசிங்கராம மாவத்தை, மோதறை, மட்டக்குளி என்னும் கொழும்புப் பகுதியாகும்.
8. ஜெயரட்ணம் கோகுலன் (கண்ணா) – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 05.02.1989 இவர் வசிக்குமிடம் கிறீன் ரோட், கொட்டாஞ்சேனை, என்னும் கொழும்புப் பகுதியாகும்.
சுவிஸில் பிரகாஸ்
9. சுவிஸில் பிரகாஸ் எனவும் புங்குடுதீவில் குமார் எனவும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 06.10.1971 இவரது வழக்கு இல:B.116/ 2015
இவர்கள் அனைவரும் 01.06.2015 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சந்தேகநபர்கள் வித்தியா படுகொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களா? இல்லையா?? என்பதை “அதிரடி” இணையம் உறுதிப்படுத்த முடியாது. விசாரணைகளின் முடிவிலேயே வழக்கின் முடிவு தெரியவரும்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் தப்பி விட்டதாகவும் அவர் உதயசூரியன் சுரேஸ் எனவும் பரவலாக பேசப்படுகின்றது. இது குறித்து பொலிஸார் கருத்துத் தெரிவிக்கையில்,
“அப்படி யாரும் தப்பிவிடவில்லை. அப்படியான ஒருவரை நாம் தேடவும் இல்லை. ஆகவே இந்த ஒன்பதுபேர் மாத்திரமே இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்னும் சந்தேகத்தின்பேரில் நாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
டீ.என்.ஏ பரிசோதனையின் முடிவிலேயே இவர்கள் குற்றவாளிகளா? இல்லையா?? என்பதை எம்மால் உறுதியாகக் கூறமுடியும் என தெரிவித்துள்ளனர்.