அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாநிலத்தின் வெள்ளையர்கள் அதிகம் வாழும் மக்கென்னி என்ற இடத்தில் அங்கு வசிக்கும் ஓருவர் நேற்றைய தினம் தனது அமெரிக்க- ஆபிரிக்க இளம் பருவத்தினரை நீர்த்தடாகம் அருகே ஒன்றுகூடி விளையாடி மகிழ்வதற்காக அழைத்ததால் அங்கு பெருமளவில் கறுப்பின இளம்பிராயத்தினர் குழுமியதை பொறுக்காத ஒருவர் பொலிசாருக்கு தொலைபேசி மூலம் முறையிட்டதை தொடர்ந்து அங்கு வந்த பொலிசார் அவர்களை விரட்டி துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

அங்கு வந்த பொலிசார் அங்கு குழுமியிருந்த கறுப்பின இளம் பருவத்தினரை அச்சுறுத்தி நிலத்தோடு நிலமாக படுக்க வைத்ததுடன் கைது செய்யப்போவதாக அச்சுறுத்தினர்.

ஒரு யுவதி தனது உரிமைகள் பற்றி பொலிசாருடன் வாதாடியபோது அவரை ஒரு பொலிசார் பலவந்தமாக பிடித்து கீழே படுக்கவைத்து துன்புறுத்தியதுடன் அந்த யுவதிக்காக வாதாடிய இளைஞன் ஒருவனை தனது துப்பாக்கியை உருவி மிரட்டி கொலைசெய்து விடுவதாக மிரட்டினார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில், பெரும்பாலும் கருப்பின பதின்ம வயதினர் கொண்ட குழுவொன்றை வெள்ளையின காவல்துறை அதிகாரி கையாண்ட விதம் குறித்த கானொளி இணையதளத்தில் வெளியானதை அடுத்து அவர் பணியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

கானொளியில் காணப்படும் சர்ச்சைக்குரிய காட்சி

பணியிலிருந்து அகற்றப்பட்டுள்ள அந்த காவல்துறை அதிகாரி, இரண்டு சிறுவர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டுவதும், 14 வயது சிறுமியொருவரை கீழே தள்ளி அமுக்கிப் பிடிப்பதும் அந்தக் கானொளியில் தெரிகிறது.

அங்குள்ள நீச்சல்க்குளம் ஒன்றில் இந்தக் குழுவினர் இடையூறுகளை ஏற்படுத்துவதாக உள்ளூர்வாசிகளிடமிருந்து காவல்துறையினருக்கு வந்த முறைப்பாட்டை அடுத்தே அங்கு காவல்துறையினர் விரைந்தனர்.

நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக மெக்கின்னி பகுதியின் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பல பகுதிகளில் கருப்பின மக்கள் மீது காவல்துறையினர் மிருகத்தனமான தாக்குதல்களை நடத்துகின்றனர் எனும் பதற்றங்கள் மேலோங்கி வரும் வேளையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுளது.

தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் தனக்கு கவலையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று டெக்ஸாஸ் மேயர் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version