ஜெய்ப்பூர்: பிரபல ஹிந்தி நடிகை ஹேமமாலினி சென்ற கார் நேற்று இரவு ஜெய்ப்பூருக்கு அருகே விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நடிகை ஹேமமாலினி படுகாயம் அடைய, ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்து உள்ளது.

பிரபல ஹிந்தி நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான ஹேமமாலினி, நேற்றிரவு தனது தொகுதியான மதுராவில் இருந்து ஜெய்ப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

2அப்போது அவர் வந்த மெர்சிடஸ் பென்ஸ் கார், இரவு 8.50 மணியளவில் ஜெய்ப்பூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள தெளஸா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி, எதிரே வந்த ஆல்டோ கார் மீது பயங்கரமாக மோதி இருக்கிறது.

இந்த விபத்தில், ஹேமமாலினியின் நெற்றி மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி இருக்கிறது. இதை தொடர்ந்து அவர் உடனடியாக ஜெய்ப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஆல்டோ காரில் வந்த 4 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகி உள்ளது. அந்த காரில் பயணித்த 4 பேரும் படுகாயத்துடன் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version