என் கொண்டையை அவிழ்க்காமல் எனக்கு தலைக்கவசம் போட்டு விடுங்கள் என்று கோவையைச் சேர்ந்த சிவனடியார் ஒருவர் பொலிஸாருக்கு சவால் விடுத்துவருகிறார் .
தமிழகம் முழுவதும் நேற்றுமுன்தினம் முதல் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தலைக்கவசம் அணிவதை எதிர்த்தும், அதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதன்படி கோவையில் சித்தர் வழிபாட்டில் ஈடுபட்டு வரும் செந்தில் குமார் என்பவர் சிவனடியார்கள் போல் முடியை கட்டி கொண்டை போட்டுள்ளார்.

ஆனால், என்னால் அணிய முடியவில்லை. முடிந்தால் எனக்கு தலைக்கவசம் போட்டுவிடுங்கள்’ என சவால் விடுக்கிறார். பொலிஸார் முயன்றும் இவருக்கு தலைக்கவசம் போட முடியவில்லை.