ராளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கள­மி­றங்­கி­யி­ருப்­பதால், பெரும் பர­ப­ரப்பும், பலத்த எதிர்­பார்ப்­பு­களும் தோன்­றி­யி­ருக்­கின்­றன.

மஹிந்த ராஜபக்ஷ எப்­படி மீண்டும் அர­சி­ய­லுக்கு வந்தார், எதற்­காக வந்தார் என்­றெல்லாம் இனியும் விவாதித்துக் கொண்­டி­ருக்க வேண்­டிய தேவை­யில்லை. அது நடந்து முடிந்து போன ஒன்று. ஏற்­க­னவே விமர்சிக்­கப்­பட்டு விட்ட ஒன்றும் கூட.

மஹிந்த ராஜபக்ஷவின் பலமும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பல­வீ­னமும், அவ­ரது மீள்வருகையில் கணி­ச­மான செல்­வாக்கைச் செலுத்­தி­யி­ருந்­தன.

இப்­போது, பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்­களின் ஆணையைப் பெற்றுக் கொள்ள முடியுமா-?

தேர்­த­லுக்கு அப்­பாலும் செல்­வாக்­குள்ள ஒரு அர­சியல் தலை­மை­யாக அவரால் இருக்க முடி­யுமா? என்ற கேள்வி­க­ளுக்கு விடை தேட வேண்­டி­யதே முக்­கி­ய­மா­னது.

மஹிந்த ராஜபக்ஷவின் பத்­தாண்டு ஆட்சிக் காலம் எத்­த­கை­ய­தாக விளங்­கி­யது என்­பதை அறிந்து கொள்வதற்கு, சுமார் ஏழு மாதங்­க­ளுக்கு  முன்னர் அவர் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர் வெளி­யான கருத்­துக்­களும், விமர்சனங்களையும் புரட்டிப் பார்த்தால் போதும்.

எனவே, மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் குறு­கிய காலத்­துக்குள் அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரு­வ­தற்கு எடுக்கப்­படும் முயற்­சி­க­ளுக்குப் பர­வ­லான ஆத­ரவு எல்லா இன, மத, மொழி மக்­க­ளி­டமும் இருக்கும் என்று கூற முடி­யாது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­யுற்ற பின்னர், சிறு­பான்மைச் சமூ­கங்கள் தொடர்­பாக மஹிந்த ராஜபக்ஷ வெளி­யிட்ட கருத்­துக்கள், அவர்கள் மீதான அவ­ரது ஆழ­மான வெறுப்­பு­ணர்­வையும் காழ்ப்­பு­ணர்­வையும் வெளிப்ப­டுத்­தி­யி­ருந்­தன.

அதா­வது. தன்னை அவர்­களே தோற்­க­டித்தார்கள் என்ற கருத்து அவ­ரி­டத்தில் இருக்­கி­றது.

அந்தக் கருத்து இந்தக் குறு­கிய காலத்­துக்குள் மறைந்து போய் விடும் என்று ஒரு­போதும் நம்­ப­மு­டி­யாது. அவ்வாறு அவரோ அவ­ரது தரப்­பி­னரோ கூறு­வார்­க­ளே­யானால், அது பொய்­யா­கவே இருக்கும்.

ஏனென்றால், ஜன­வரி 8ஆம் திகதி நடந்த தேர்­தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வீழ்ந்த அடி அவ­ரது எதிர்­காலத் திட்­டங்­க­ளையே தவி­டு­பொ­டி­யாக்­கிய ஒன்று.

இப்­போது அவர் அர­சி­ய­லுக்கு மீண்டும் வந்­தி­ருந்­தாலும், முன்­னைய அதி­காரத் தோர­ணை­யுடன் நடந்து கொள்ளக் கூடிய எந்தப் பத­வி­யையும் அவ­ருக்கு அளித்து விடப் போவ­தில்லை.

indexபுரி­யும்­படி சொல்­லப்­போனால் மஹிந்த ராஜபக் ஷ இழந்­து­போன ஜனா­தி­பதிப் பதவி என்­பது ஒரு ‘ஜாக்பொட் பரிசு’ மாதிரி.

இப்­போது அவர் அடைய முயற்­சிக்கும் பிர­தமர் பதவி என்­பது ஆறுதல் பரிசு தான்.

இனிமேல் ‘ஜாக்பொட் பரிசு’ கிடைக்­காது என்று உறு­திப்­ப­டுத்திக் கொண்ட நிலையில் தான் அவர் ஆறுதல் பரி­சுக்­காக அலை­கிறார்.

இப்­ப­டிப்­பட்ட நிலையில், தனது ‘ஜாக்பொட் பரிசை’ தட்­டிப்­ப­றித்­த­வர்கள் என்ற கருத்து, அவ­ரி­டத்தில் இருந்து இவ்­வ­ளவு விரை­வாக மறைந்­தி­ருக்கும் என்று எதிர்­பார்க்­கவே முடி­யாது.

எனவே, மஹிந்த ராஜபக் ஷவின் மீள்­வ­ருகை சிறு­பான்­மை­யி­னங்­க­ளுக்கு ஆரோக்­கி­ய­மான அர­சியல் நிலையை ஏற்­ப­டுத்தும் என்று சொல்­வ­தற்­கில்லை.

அவர்­க­ளுக்கு அச்­சத்­தையோ, ஒரு­வித மிரட்­சி­யையோ தான் கொடுத்­தி­ருக்­கி­றது மஹிந்த ராஜபக் ஷவின் மீள் வருகை.

இந்­த­நி­லையில், மஹிந்த ராஜபக் ஷவுக்கு முக்­கி­ய­மான சவால் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைப் பெறு­வது. தமிழ், முஸ்லிம் மக்கள், இவர் மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வந்தால், தாம் பழி­வாங்­கப்­ப­டுவோம் என்ற கலக்­கத்தில் இருக்­கின்­றனர்.

அவர்­களின் அச்­சத்தைப் போக்­கு­கின்ற வேலைத்­திட்­டங்­களை மஹிந்த ராஜபக் ஷவினால் மேற்­கொள்ள முடியாது. அதனைச் செய்­வ­தற்கு குறிப்­பிட்ட கால­அ­வ­கா­சத்தைப் பெற வேண்டும்.

ஆங்­காங்கே சில முஸ்­லிம்­களின் வீடு­க­ளுக்குச் சென்று இப்தார் விருந்தில் பங்­கேற்­பதால் மட்டும், மஹிந்த ராஜபக் ஷ மீதான நம்­பிக்கை முஸ்­லிம்­க­ளிடம் வந்­து­விடப் போவ­தில்லை.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உறு­தி­யான ஆத­ரவைத் தெரி­வித்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லா, மட்­டக்­க­ளப்பில் வேட்­பு­மனுத் தாக்கல் செய்த பின்னர், மஹிந்த ராஜபக் ஷவுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்­பிட்­டதை மறக்க முடி­யாது.

மஹிந்த ராஜபக் ஷவும், ஹிஸ்­புல்­லாவும் ஒரே கட்­சியில் -ஒரே சின்­னத்தில் போட்­டி­யிடும் தலைமை வேட்பாளர்­க­ளாக இருந்த போதிலும், மகிந்­தவின் பெயரைக் கூறி வாக்கு கேட்டால் தமது தலையும் பறந்து போகும் என்­பதால் தான் ஹிஸ்­புல்லா அவ்­வாறு கூறி­யி­ருந்தார்.

ஹிஸ்­புல்­லாவின் இந்தக் கருத்து, முஸ்­லிம்­க­ளி­டத்தில் மஹிந்த ராஜபக்ஷ சம்­பா­தித்து வைத்­தி­ருக்­கின்ற வெறுப்பை தெளி­வா­கவே பிர­தி­ப­லிக்­கி­றது.

அதே­வேளை தமி­ழர்கள் மத்­தியில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இருக்­கின்ற மோச­மான பெயர் குறித்து எவரும் கூறித் தெரிய வேண்­டி­ய­தில்லை.

எனவே, மஹிந்த ராஜபக்ஷ இம்­முறை தேர்­தலில் தனியே சிங்­கள பௌத்த வாக்­கு­களைக் குறி­வைத்து தான் போட்­டி­யிட வேண்­டிய நிலையில் இருக்­கிறார்.

சிங்­கள பௌத்த வாக்­கு­களால் மட்டும் மஹிந்த ராஜபக் ஷவின் கனவு பலித்து விடுமா என்­பது சந்­தேகம் தான்.

சிங்­கள பௌத்த வாக்­குகள் மட்டும், அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு போதாது என்று அண்­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்­த­நி­லையில் சிங்­கள பௌத்த வாக்­குகள் இம்­முறை பல கூறு­க­ளாகப் பிரியும் சூழல் ஒன்று தோன்றியிருக்கிறது.

பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஜேவிபி, ஜன­நா­யக கட்சி என்று பல கட்­சிகள் சிங்­கள வாக்­கா­ளர்­களைக் குறி­வைத்­தி­ருக்­கின்­றன.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வாத சக்­தி­களின் வாக்­கு­களைத் தான் அதிகம் நம்புகிறார் எதிர்­பார்க்­கிறார்.

அவர் தன்னை ஒரு சிங்­கள பௌத்த மக்­களின் தலை­வ­னாக காண்­பித்துக் கொள்­வ­தற்கு, சிங்­கள பௌத்த வாக்கு­களின் மூலம் வெற்­றியைப் பெறு­வது அவ­சியம்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட அவர் அதிகம் நம்­பி­யது சிங்­கள பௌத்த வாக்­கு­களைத் தான்.

தனது போர் வெற்றிப் பிர­தா­பங்­க­ளையும், சிங்­கள இன­வாதக் கருத்­துக்­க­ளையும், அவர் அதற்­காகப் பயன்­டுத்திக் கொண்டார்.

அதை­விட, சர்­வ­தேச தலை­யீ­டுகள், போர்க்­குற்ற விசா­ரணை, விடு­தலைப் புலி­க­ளையும் அவர் சிங்­கள பௌத்த வாக்­கு­களைத் திரட்­டு­வ­தற்­காக பயன்­ப­டுத்­தினார்.

ஆனாலும், அவரால் அந்த தேர்­தலில் வெற்­றியைப் பெற முடி­யாது போனது. ஏனென்றால் சிங்­கள பௌத்த வாக்­குகள் மட்­டுமே, அவ­ருக்கு போது­மா­ன­வை­யாக இருக்­க­வில்லை.

இம்­முறை, அவர் சிங்­கள பௌத்த வாக்­கு­களை மட்டும் குறி­வைத்து   கள­மி­றங்­கி­யி­ருந்­தாலும், தமிழ், முஸ்லிம் வாக்­கு­களை மட்­டு­மன்றி, சிங்­கள பௌத்த வாக்­கு­க­ளையும் இழக்கப் போகிறார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த தேர்­தலில் ஆத­ர­வ­ளித்த பொது பல­சேனா இம்­முறை தனித்துப் போட்டியிடுகிறது.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு தாம் இலட்­சக்­க­ணக்­கான வாக்­கு­களை திரட்டிக் கொடுத்­த­தாக அந்த அமைப்பு பின்னர் உரிமை கோரி­யது.

இப்­போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ராக பொது பல­சேனா வேட்­பா­ளர்­களை நிறுத்­தி­யி­ருக்­கி­றது. எனவே பொது பல­சே­னாவின் மூலம் கிடைத்த வாக்­கு­களை மகிந்த இழக்க நேரிடும்.

இன்­னொரு பக்­கத்தில், சிங்­கள பௌத்­தர்கள் மத்­தியில் செல்­வாக்குப் பெற்ற அஸ்­கி­ரிய, மல்­வத்த பீடங்­களும் கூட மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வாக இல்லை.

நல்­லாட்சி, ஊழ­லற்ற ஆட்சி உள்­ளிட்ட பல விட­யங்­களில் மல்­வத்த, அஸ்­கி­ரிய பீடா­தி­ப­திகள், தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றனர்.

இதுவும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு முக்­கி­ய­மான ஒரு பின்­ன­டைவு.

இந்தக் கட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் உள்ள நேர்­மை­யான- நல்­லாட்­சியை விரும்­பு­கின்ற வாக்காளர்களும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கருத்­துக்­களை அடுத்து பின்­வாங்கும் நிலை ஒன்று ஏற்­ப­டலாம்.

இவை­யெல்லாம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு சிங்­கள வாக்­கா­ளர்­க­ளிடம் இருந்து சந்­திக்கப் போகும் சவால்.

இவை­யெல்­லா­வற்­றையும் தான் தாண்டித் தான் மஹிந்த ராஜபக் ஷ முன்­னேற வேண்­டி­யி­ருக்­கி­றது.

இந்தச் சவால்­களை எல்­லா­வற்­றையும் தாண்டி, பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்றி பெற்று ஆட்­சி­ய­மைக்கும் அள­வுக்கு முன்­னே­றி­னாலும், மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ற தடை இருக்­கி­றது.

அவர் மஹிந்த ராஜபக் ஷவுக்கு பிர­தமர் பதவியை வழங்க முடியாது என்று கைவிரித்து விட்ட நிலையில், அடுத்த கட்டம் என்ன என்று தீர்மானிக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக் ஷவின் நகர்வுகளை இதுவரையில் தடுத்து நிறுத்துவதில் பெரியளவில் வெற்றி காணாத மைத்திரிபால சிறிசேன, அடுத்த கட்டத்தில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வலுவான தடை ஒன்றைப் போட முனைகிறார்.

அது எந்தளவுக்கு சாத்தியமாகும் – அது மஹிந்த ராஜபக் ஷவை நிரந்தரமாகவே அரசியலில் இருந்து ஓரங்கட்ட உதவுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த தேர்தல் என்பது, அவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் எதிர்கொண்ட ஜனாதிபதி தேர்தலை விடக் கடினமானது- சவாலானது என்பதில் மட்டும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

– எஸ்.கண்ணன்

Share.
Leave A Reply

Exit mobile version