3 வாகனங்களில் ஹோட்டலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. விடுமுறை சுற்றுலாவிற்கு செல்பவர்கள் தம்முடன் வரையறுக்கப்பட்ட பொதிகளையே எடுத்துச் செல்வது வழமையாகும்.
ஆனால், பிரித்தானியாவுக்கு விடு முறையைக் கழிப்பதற்கு தனிப்பட்ட விமானத்தில் பயணத்தை மேற்கொண்டிருந்த கட்டார் இளவரசர் தாமிம் பின் ஹமாத் அல்–தானி, தனது பெருந்தொகையான பயணப் பொதிகளை பிறிதொரு விமானத்தில் எடுத்துச் சென்றுள்ளார்.
டோஹா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் லண்டனை வந்தடைந்த அந்தப் பொதிகள் இரு லொறிகள் மற்றும் ஒரு வேன் உள்ளடங்கலாக 3 வாகனங்களில் லண்டனில் இளவரசர் தங்க ஏற்பாடாகியிருந்த 5 நட்சத்திர ஹோட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டன.
பார்க் வீதியிலுள்ள குரொஸ்வெனர் ஹோட்டலில் ஒரு இரவுக்கு 5,000 ஸ்ரேலிங் பவுண் கட்டணம் அறவிடும் தங்குமிடத்தில் இளவரசர் தங்கினார்.
