லாஸ் வேகாஸில் உள்ள மேடம் துஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ராப் பாடகி நிக்கி மினாஜின் மெழுகுச் சிலையுடன் ரசிகர்கள் தவறான கோணங்களில் புகைப்படம் எடுப்பதால், அந்தச் சிலைக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

பாடகி நிக்கி மினாஜின் மெழுகுச் சிற்பத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என மேடம் துஸாட்ஸ் கூறியுள்ளது.

அனகொண்டா என்ற ஆல்பத்தில் நிக்கி மினோஜ் தோன்றும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு, இந்த மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மண்டியிட்டு, கைகளை ஊன்றியிருப்பதுபோல இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

இம்மாதத் துவக்கத்தில் லாஸ் வேகாஸிலிருக்கும் அருங்காட்சியகத்தில் இந்தச் சிலை திறக்கப்பட்டதிலிருந்து, அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக ரசிகர்கள் அந்த அருங்காட்சியகத்திற்கு படையெடுத்துவருகின்றனர்.

சில ரசிகர்கள் ஆர்வமிகுதியின் காரணமாக, மோசமான கோணங்களில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

அந்த மெழுகு உருவத்துடன் பாலியல் உறவுகொள்வது போல புகைப்படம் எடுத்தும் சிலர் இணையத்தில் வெளியிட்டனர்.

இதையடுத்து, தங்கள் அருங்காட்சியகத்தில் இருக்கும் மெழுகுச் சிலைகள் மதிக்கப்பட வேண்டுமென மேடம் துஸாட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இதையடுத்து, அந்த மெழுகுச் சிலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த உருவத்தை மாற்றியமைக்கப் போவதாகவும் மேடம் துஸாட்ஸ் தெரிவித்துள்ளது.

20 கலைஞர்கள் 6 மாதங்களைச் செலவழித்து இந்த மெழுகுச் சிலையை உருவாக்கினர்.

1759364030art copie

Share.
Leave A Reply

Exit mobile version