யாழில் இளம்பெண் விரட்டிச் செல்லப்பட்டு கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காணிப் பிணக்கு காரணமாக பெரிய தந்தையாரே இந்த பாதகத்தை அரங்கேற்றினார்.

உயிரிழந்த பெண்ணின் சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்தார்.

இந்தச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று (17) முற்பகல் இடம்பெற்றது.

இருபாலையை சேர்ந்த பாலசிங்கம் பரிதா (30) என்பவர் உயிரிழந்தார். பாலசிங்கம் ஜெயபாலன் (35) என்பவர் படுகாயமடைந்தார்.

 cats

“காணிப் பிணக்கு காரணமாக உறவினர்களான அயலர்கள் இருவருக்கு இடையே நீண்டகாலமாக பிணக்குக் காணப்பட்டது.

அதனைச் சாட்டாக வைத்து பெரிய தந்தை வேலன் கிருஸ்ணன் (60) கத்தியுடன் சென்று கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக வைத்து பெறாமகன் ஜெயபாலனுக்கு வயிற்றில் குத்தியுள்ளார். அவர் நிலத்தில் சரிந்து வீழ்ந்தார்.

அதனால் கத்தியால் குத்தியவர் துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளார்.

வழியில் பெறாமகள் பரிதாவை கண்டுள்ளார். அவரைக் கத்தியால் முற்பட்ட போது, பெரியதந்தையை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு பரிதா தப்பி ஓடியுள்ளார்.

பரிதாவை துரத்திச் சென்றுள்ளார் கிருஸ்ணன். ஓடிச் சென்ற பரிதா தடுமாறி வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளார்.

அதன்போது அவரை கழுத்து அறுத்து கிருஸ்ணன் கொலை செய்துள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version